அடுத்த 4 நாட்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

  0
  1
  rain

  தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  தமிழகத்தில் கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன் படி இன்று காலை முதல் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. 

  ttn

  இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.