அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

  0
  6
  கனமழை

  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 17-ம் தேதி துவங்கிய நிலையில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இருப்பினும், வடகிழக்கு பருவ மழை சென்னையில் அதிகளவில் பெய்யவில்லை. வங்கக்கடலில் உருவான புயல் சின்னத்தால் சென்னையில் மழை பெய்யக்கூடும் என்கிற எதிர்பார்ப்பும், புயல் அந்தமான் பகுதிகளில் சென்று வலுவிழந்ததால் சென்னைக்கு அதிகளவில் மழையில்லை.

  rain

  ஆனாலும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், இந்த மழை அடுத்த மூன்று தினங்களுக்கு சென்னையில் அவ்வப்போது பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது.