அடுத்த மாதம் டிரம்ப் இந்தியா வர இருப்பதால், அவரது காஷ்மீர் கருத்துக்கு அரசு வலுவான எதிர்ப்பு தெரிவிக்காது….

  0
  1
  டொனால்ட் டிரம்ப்

  அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளதால், காஷ்மீர் தொடர்பான அவருடைய கருத்துக்கு மத்திய அரசு வலுவாக எதிர்ப்பு தெரிவிக்காது என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

  சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில், பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான்கானிடம் டிரம்ப் ஆலோசனை செய்ததாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் முடிந்ததால் நாங்கள் உதவுவோம் என தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்து விட்டது.

  இம்ரான் கான், டொனால்ட் டிரம்ப்

  காஷ்மீர் விவகாரம் இருதரப்பு பிரச்சனை என பலமுறை மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் தொடர்ந்து காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து மூக்கை நுழைத்து வருகிறார். இருந்தாலும் தற்போது காஷ்மீர் விவகாரம் தொடர்பான டிரம்பின் கருத்துக்கு இந்தியா வலுவான எதிர்ப்பை காட்டாது விரும்பாது. ஏனென்றால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக இந்தியாவுக்கு அடுத்த மாதம் 24ம் தேதி வர உள்ளார். அதனால் கடுமையான எதிர்ப்பை காட்டி ஒரு கசப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என மத்திய அரசு நினைக்கும்.

  மத்திய அரசு

  காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்பின் கருத்து மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில் நமது நிலை தெளிவாக மற்றும் நிலையானது. காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபருக்கு வேலை இல்லை. இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை. மேலும் மத்தியஸ்தம் அல்லது வசதி ஏற்படுத்துவதாக டிரம்ப் தனது பேச்சில் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.