அடுத்த மாதம் சீனாவில் வெளியாகிறது ரஜினியின் 2.0

  0
  1
  ரஜினிகாந்த்

  நடிகர் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படம் சீனாவில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  சென்னை: நடிகர் ரஜினிகாந்த்தின் 2.0 திரைப்படம் சீனாவில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் 2.0. லைகா நிறுவனத்தின் தயாரித்துள்ள இப்படத்தில் அக்சயகுமார் வில்லனாக நடத்துத்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய சாதனை வசூல் செய்தது. 

  இந்த நிலையில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மொழி மாற்றப்பணி செய்யப்பட்டு சீனாவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மொழி மாற்றப்பணி செய்து கடந்து ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அரவிக்கபட்டுருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. 

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  2.0 is CHINA ready!!! 6th September release in over 40,000 IMAX 3D screens ???

  A post shared by Amy Jackson (@iamamyjackson) on

  தற்போது இந்த படம் சீனாவில் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 10,500 ஸ்கிரீன்களில் வெளியாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.