அடுத்த தொடரிலும் தோனிக்கு வாய்ப்பில்லை.. என்ன தான் நடக்கு இந்திய அணியில்?

  0
  3
  தோனி

  வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் தோனி ஆடமாட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

  உலககோப்பைக்கு பிறகு தோனி நிச்சயம் ஓய்வு பெறுவார் என்கிற தகவல் வந்த வண்ணம் இருந்தது. ஆனால், தொடர்ந்து மவுனம் காத்து வந்த தோனி, 2 மாதங்கள் விடுப்பு எடுத்து ராணுவ பயிற்சி செல்ல இருப்பதாக செய்வித்தார். 

  dhoni

  இதனால், வெஸ்ட் இண்டீஸ் சென்ற லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியில் தோனியை எடுக்கவில்லை. 2 மாதம் என்பதால் தென்னாபிரிக்கா தொடருக்கும் தோனி இருக்கமாட்டார் என்பது உறுதியானது.

  டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்திற்கும் ரிஷப் பண்ட் முதன்மை கீப்பராக தேர்வு செய்யப்பட்டு, ஆட வைக்கப்பட்டார். கிட்டத்தட்ட தோனியின் சகாப்தம் முடிந்ததே விட்டது என எண்ணப்பட்டு வரும் நிலையில், தோனி மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான செயலை செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

  dhoni

  அதாவது, வங்கதேச தொடரில் இடம்பெறுவாரா? மீண்டும் புறக்கணிக்கப்படுவாரா? என்று இரு த நிலையில், தனது விடுப்பை மேலும் 2 மாதங்களுக்கு நீடித்து நவம்பர் மாதம் வரை இந்திய அணியில் இருக்க மாட்டார் என தெரியவந்துள்ளது. இதனால், வங்கதேச தொடர் மற்றும் விஜய் ஹசாரே தொடர் இரண்டிலும் தோனி ஆடப்போவதில்லை.

  டிசம்பர் மாதம் இந்தியா வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தோனி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் தோனியின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பது தெரியவில்லை. ஆதலால் பொறுத்திருந்து தான் காண வேண்டும்.