’அடுத்த சட்டசபைத் தேர்தலில் நாங்கள் யார் என்று காட்டுவோம்’ மீசையை முறுக்கும் கமல்..

  0
  1
   கமல்

  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தாங்கள் எதிர்பார்த்தைவிடவும் அதிகமான ஆதரவை மக்கள் வழங்கியிருப்பதாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒத்திகைதான் தங்களுக்கு இந்தத் தேர்தல் என்றும் கமல் பெருமையுடன் கூறினார்.

  மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தாங்கள் எதிர்பார்த்தைவிடவும் அதிகமான ஆதரவை மக்கள் வழங்கியிருப்பதாகவும் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒத்திகைதான் தங்களுக்கு இந்தத் தேர்தல் என்றும் கமல் பெருமையுடன் கூறினார்.

  kamal

  டிடிவி தினகரன் கட்சியை விட சற்று குறைவாக, நாம் தமிழர் சீமானை சற்று அதிகமாக மக்கள் நீதி மய்யம் தனது முதல் தேர்தலில் சாதித்திருக்கும் நிலையில் இன்று சற்றுமுன்னர் தனது ஆழ்வார்ப்பேட்டை கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கமல். அப்போது பேசிய அவர்,” “14 மாதங்களே ஆன இந்த குழந்தையை வாக்காளர்கள் வாரியணைத்து, ஓடவிட்டு பார்ப்பார்கள் என்று  நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

  இந்த தேர்தலில், மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்காளர்கள் நேர்மையாக வாக்களித்து, எங்களிடம் வேறெந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அடுத்து வரக்கூடிய சட்டசபை தேர்தலுக்கு ஒத்திகையாக அமைந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தொடர்ந்து செயலாற்றுவோம். 

  kamal pressmeet

  மத்திய ரசைப்பொறுத்தவரை எங்களுக்கு ஒரே கோரிக்கைதான். விவசாயம் கெட்டுப்போகாத திட்டங்களை மத்திய அரசு இங்கே கொண்டுவர வேண்டும். தொழிற்சாலைகளுக்கு எதிரான கொள்கைகளைகொண்டதல்ல  மக்கள் நீதி மய்யம் . ஆனால் அத்தனை தொழிற்சாலைகளையும் தமிழகத்தில்தான் அமைக்க வேண்டும் என்று அடம்பிடிக்கக்கூடாது. அதைத்தான் எதிர்க்கிறோம். இன்னொன்று விவசாயத்தை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் நாங்கள் எதிராகத்தான் இருப்போம். பாரபட்சம் இல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு நன்மைகளை செய்ய வேண்டும்’’ என்று பேசினார் கமல்.

  kamal

  அடுத்து ‘பிக்பாஸ் 3’ சீஸன் மற்றும் ’இந்தியன் 2’ படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், “சினிமா என்னுடைய தொழில். ஆனால் அரசியல் எனது தொழில் அல்ல. அது என்னுடைய கடமை. பாஜகவின் ’பி’ டீம் யார் என்பதை நீங்கள் கண்டு பிடியுங்கள். நாங்கள் நேர்மையின் ஏ டீம்” என்று தெரிவித்தார். இந்த சந்திப்பில் கமல் பேசியதை வைத்துப் பார்க்கும்போது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொழிலில் முழுமையாக இறங்கி விட்டு அடுத்த சட்டசபைத் தேர்தல் வரும்போது மட்டுமே மீண்டும் கடமை ஆற்றவருவார் என்று தெரிகிறது.