அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார்!! ஸ்ரீனிவாசன் அதிரடி பேட்டி

  0
  2
  ஸ்ரீனிவாசன்

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அடுத்த ஆண்டும் மகேந்திர சிங் தோனியே நீடிப்பார் என அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.

  இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரர்களில் ஒருவருமான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக பல சாதனைகள் புரிந்துள்ளார். ஐசிசி நடத்தும் அனைத்து கோப்பைகளையும் இந்தியாவிற்காக பெற்றுத் தந்துள்ளார். 

  csk

  இந்நிலையில் தோனியின் எதிர்காலம் உலக கோப்பை அரையிறுதி வெளியேற்றத்திற்கு பிறகு இந்திய அணியில் கேள்விக்குறியாகியுள்ளது. ரசிகர்களும் தோனி எப்போது ஓய்வு பெறுவார்? என்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். 

  ஆனால் இவை அனைத்திற்கும் தோனி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பிசிசிஐயின் பொதுக்கூட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி ஓய்வு முடிவை அறிவிக்க இருக்கிறார் என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இவை அனைத்தும் வதந்தியே தோனியின் மனைவியே ட்விட் செய்துள்ளார். 

  srinivasan

  இந்நிலையில், கோவையில் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற புதிய மைதானம் திறப்பு விழாவில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டபோது தோனியின் ஓய்வு குறித்தும் சென்னை அணியின் அடுத்த தலைமை யாரிடம் இருக்கும் என்பது குறித்தும் நிருபர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவில் தோனியை எப்படி நடத்துகிறார்கள் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. ஆனால் அடுத்த ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தான். அவ்வளவு தான் கூற முடியும். மேலும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள் என அதிரடியாக பதில் அளித்து விட்டு நகர்ந்தார்.