அடுத்து நீங்கதான்… விஜயகாந்தை கூலாக்கி எடப்பாடி… இப்படியொரு வாக்குறுதியா..?

  0
  12
  பிரேமலதா

  அடுத்து சேலம் கார்ப்பரேஷன் டெபுடி மேயரே நீங்கதான் தெரியுமா? என்று வாத்தியம் வாசித்து வருகிறார்கள்.

  கூட்டணி போருக்கு தேமுதிக தயாராகிவிட்டது. சேலம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பதவி, அதிமுக கூட்டணியில் 4 வார்டுகளில் மட்டுமே ஜெயித்த பாமகவிற்கு  தான் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம். அது அப்படியே நடந்து இருக்கிறது.

  அதேபோல் ஒன்றியக்குழு சேர்மன் பதவிக்கும், பாமகவுக்கு அதிகமாகவே கொடுத்து இருக்கிறார்கள். இதனால் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக ரொம்பவே சூடாகி விட்டது. அவர்களை கூல் படுத்துவதற்கு புதிய அஸ்திரத்தை அதிமுக வீசியிருக்கிறது.

  vijayakanth

  அடுத்து கார்ப்பரேஷன், முனிசிபாலிடி, டவுன் பஞ்சாயத்து எலக்‌ஷன் அறிவிப்பு உடனடியாக வந்துவிடும். அதில்  நீங்களே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்து சேலம் கார்ப்பரேஷன் டெபுடி மேயரே நீங்கதான் தெரியுமா? என்று வாத்தியம் வாசித்து வருகிறார்கள். சூடாக இருந்த தேமுதிக நிர்வாகிகள் இதனை நம்பி இப்போது மிஸ்டர் கூலாகி விட்டார்கள்.