அடி வெளுத்துடாங்க…. மண்டையில காயம்… சிறை போலீசாருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிர்பயா குற்றவாளி…

  0
  2
  பவன் குப்தா

  சிறையில் தன்னை தாக்கி காயப்படுத்திய 2 போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிடக்கோரி நிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாணைக்கு வருகிறது.

  நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர்களில் ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறார் என்பதால் சில ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர். அண்மையில்  நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா டெல்லி துணைநிலை ஆளுநனர் அனில் பைஜால் முன் புதிதாக கருணை மனு ஒன்று தாக்கல் செய்தார். 

  நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

  இந்நிலையில் நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தன்னை போலீசார் தாக்கியதாக டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மண்டோலி சிறையில் தன்னை அடித்து காயப்படுத்திய 2 போலீசார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் லத்தி, பெரிய கம்புகள் மற்றும் கைகளால் தலையில் தாக்கினர். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

  நீதிமன்றம்

  இதனையடுத்து குற்றவாளி பவன் குப்தாவின் குற்றச்சாட்டு தொடர்பாக பதில் அளிக்கும்படி மண்டோலி சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிமன்றம் இந்த வழக்கை இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறது. வழக்கம் போல் தங்களது தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிப்போடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே பவன் குப்தா தற்போது டெல்லி நீதிமன்றத்தில் நாடியுள்ளதாக தெரிகிறது.