அடிப்படை வசதிகள் எதுவுமில்லை; நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் தமிழக கிராமம்

  0
  1
  போராட்டத்தில் மக்கள்

  2017 – 2018 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

  ராமநாதபுரம், மேலசிறுபோது கிராமத்தில் வசிக்கும் மக்கள் திங்கள் அன்று கருப்புக் கொடி ஏந்தி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதையும் அரசாங்கம் சரிவர செய்து தராததால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

  AFFDF

  2017 – 2018 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இங்கு ஒழுங்கான சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, குழந்தைகள் படிக்க நல்ல பள்ளிக்கூடங்கள் இல்லை. அதேபோல் பயிர் காப்பீடு தொகையும், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெற வேண்டிய தொகையும் வரவில்லை என தெரிவித்தார்.

  ffgfg

  மேலும் அவர், எங்கள் குறைகளை பற்றி அரசாங்கத்திடம் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தும் பலனில்லை. எனவே மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

  தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தேர்தல் துவங்குகிறது, மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

   

  இதையும் வாசிங்க

  மிரட்டும் எபோலா; காங்கோவில் 655 பேர் பலி!