அடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி.. 23 வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்!

  0
  11
  பரனூர் சுங்கச்சாவடி

  செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியருக்கு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது.

  செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியருக்கு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த ஊழியர் டிரைவரை தாக்கியதால் அங்குத் திரண்ட பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் டிரைவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதில் கண்ணாடிக் கதவுகள், தடுப்பு குழாய்கள், கேபிள்கள் என அனைத்தும் சேதம் அடைந்தன. அதுமட்டுமில்லாமல் அங்கு இருந்த பணத்தையும் வாரி இறைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், தடியடி நடத்தி அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்தனர். 

  ttn

  இதனையடுத்து, அந்த போராட்டத்திற்குப் பிறகு அன்று வசூலான ரூ.18 லட்சம் காணாமல் போகியுள்ளதாகச் சுங்கச்சாவடி ஊழியர் விஜயபாபு புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த பணத்தைச் சுங்கச் சாவடி ஊழியர்களே திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சுங்கச் சாவடி ஊழியர்கள் பூபதி ராஜா, செந்தில்குமார், ஜெயவிஜயன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சுங்கச்சாவடி சேதம் அடைந்ததால் அதனைச் சரிப்படுத்தும் வரை, அதன் வழியே செல்லும் வாகனங்கள் கட்டணம் இன்றி செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் அந்த சுங்கச்சாவடி சரிப்படுத்தப்படாததால் 23வது நாளாகச் சுங்கக் கட்டணமின்றி வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.