அடிக்குமேல் அடி! தொடர் தோல்வியால் திணறும் பாஜக…

  0
  4
  பாஜக

  மகாராஷ்டிராவில் உள்ள லாத்தூர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. 

  மகாராஷ்டிராவில் உள்ள லாத்தூர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. 

  பாஜக, சிவ சேனா இடையிலான பேச்சுவார்த்தை முறிந்துவிட்டது. இதனால் மகாராஷ்டிராவை ஆள நினைத்த பாஜகவின் கனவு கானல் நீராய் மறைந்தது.  சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. 

  பாஜக
  இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாநகராட்சியில் நடைபெற்ற மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பாஜக பக்கம்  70 கவுன்சிலர் பெரும்பான்மை இருந்தபோதிலும்,  பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இரு கவுன்சிலர்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததால் பாஜக தோல்வியை தழுவியது. இதனால் மகாராஷ்டிராவில் உள்ளாட்சியில் கூட நுழையமுடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு லாத்தூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.