அடர்ந்த காட்டில், காதலனை தாக்கி காதலி பலாத்காரம்! பிடிபட்ட போதை கும்பல்!

  0
  2
  மாதிரி படம்

  வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 32 வயதானவர் தினேஷ்.  இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் குடங்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 32 வயதுடைய, ஏற்கெனவே  திருமணமான பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

  வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த 32 வயதானவர் தினேஷ்.  இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் குடங்கள் தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 32 வயதுடைய, ஏற்கெனவே  திருமணமான பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த திங்களன்று காலையில் தினேஷ், தன்னுடன் பணிபுரியும் அந்தப் பெண்ணையும் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.

  lovers

  அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி ஒரு இருசக்கர வாகனம் தன்னந்தனியாக நிற்பதைக் கண்ட 6 பேர் கொண்ட போதைக் கும்பல், நிச்சயம் பெண்ணை அழைத்துக் கொண்டு தான் யாரோ வந்திருக்க வேண்டும் என எண்ணி அவர்கள் திரும்ப வருவதற்காக காத்திருந்தது. தினேஷ், அந்த பெண்ணும் தனிமையில் இருந்து விட்டு, போதை கும்பல் காத்திருக்கும் நேரம் பார்த்து, அந்த சமயத்தில் வெளியே வந்திருக்கிறார். தனியே ஒருவன் பெண்ணுடன் வந்திருப்பதைப் பார்த்த போதை கும்பல் சரமாரியாக தினேஷைத் தாக்கத் தொடங்கியது. ஆள் அரவமற்ற அடர்ந்த காட்டில் 6 பேரிடம் தனியாக சிக்கிக் கொண்ட தினேஷ், தனது காதலியை விட்டு விடுமாறு அவர்களிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் தினேஷை அடித்து விரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை வனப்பகுதிக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

  women harassement

  அந்த பகுதிகளில், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவோர் வரும் சத்தம் கேட்டு அந்தக் கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதை அடுத்து குற்றுயிரும், குலையுயிருமாக அங்கிருந்து தப்பிய இளம்பெண், தனக்கு நேர்ந்த துயரம் குறித்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார்  தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இடையப்பட்டி அழகேசன், சேதுபதி, மணிகண்டன், தாண்டானூரைச் சேர்ந்த கோகுல், வெங்கடேசன், கலையரசன் ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற வேறு ஏதேனும் சம்பவங்கள் அந்த பகுதியில் நடந்துள்ளதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.