அடப்பாவிங்களா… என் செல்லத்தையே கோபப்பட வச்சுட்டீங்களே! கொந்தளிக்கும் லாஸ்லியா ரசிகர்கள்!

  0
  2
  லாஸ்லியா

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான கடைசி புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 10 நாட்கள் ஆன நிலையில் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா. ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்பு தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர். தினமும் இவர் நடனமாடுவதை பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர். 

  bb

  இந்த நிலையில் அப்படி அமைதியாக இருக்கும் லாலியாவாயே தற்போது பெண் கூட்டம் சண்டை போட்டு கோபப்பட வெய்துள்ளனர். அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஷெரின், மதுமிதாவை பார்த்து சதி, சாவித்திரி வேஷம் போட்டு எல்லாரையும் cheat செய்யுற என்று சொல்ல உடனே வழக்கம் போல் அதில் வனிதாவும், அபிராமியும் இணைந்து சண்டை போடுகின்றனர். 

  அதை எப்போதும் போல் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த,லாஸ்லியாவுக்கு திடீரென முதல் முறையாகக் கோபம் வந்துள்ளது.  இதனால் அங்கு இருந்து மிகவும் கோபத்துடன் எதுவும் பேசாமல் நகர்ந்து செல்கிறார். அதை பார்த்த நம்ப சண்டைக்காரி வனிதா, ‘தேவ இல்லாம இவ எதுக்கு react பண்றா. அவள விடுங்க’ என்று மீண்டும் குழாயடி சண்டை தொடர்கிறார். இதைப் பார்த்த  லாஸ்லியா ஆர்மி ரசிகர்கள் வனிதாவை கண்ட மேனிக்குத் திட்டி தீர்த்து வருகின்றனர்.