“அடப்பாவிங்களா இதுக்கெல்லாமா துப்பாக்கியால சுடுவிங்க?” -வீடியோ  ஷூட்டிங் செய்தவர் மீது  துப்பாக்கி ஷூட்டிங் ..

  0
  1
  ரோஹித் குமார்

  ஆக்ராவில் வியாழக்கிழமை  உ.பி.யின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் திருமணத்தை படம்பிடிக்கும்போது கேமராவின் கோணத்தில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து, திருமண படப்பிடிப்பிற்காக பணியமர்த்தப்பட்ட ஒரு வீடியோகிராஃபர்  சுட்டுக் கொல்லப்பட்டார்.
  சுடப்பட்டு இறந்த வீடியோகிராஃபர் 20 வயதான ரோஹித் குமார் ஆவார்.அவருடன் வந்த சத்யேந்திர குமார் சிறு காயங்களுடன் தப்பினார்.இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்களை சுட்ட   யாதவ் மற்றும் அவரது உதவியாளர் குல்தீப் தப்பி ஓடிவிட்டனர். 

  photograper shot

  கடந்த வியாழன்று ஆக்ராவில் ஒரு திருமண ஊர்வலத்தை ஒரு நாற்காலியில் நின்று  தினேஷ் குமார், ரோஹித் குமார் மற்றும் சத்யேந்திர குமார் ஆகியோரின் கேமரா குழுவினர் படம்பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது “திடீரென்று, யாதவ் மற்றும் குல்தீப் வீடியோகிராஃபர் குழுவினருடன் வீடியோவை படமாக்கும்  கோணத்தை மாற்ற சொல்லி தகராறு செய்தனர்.அப்போது,யாதவ் ரோஹித்தை இடது முழங்காலிலும்  அவரது சகாவை வலது காலிலும் துப்பாக்கியால் சுட்டார் .இதில் ரோகித் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இதனால் ரோஹித் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.