அடப்பாவிகளா அதுக்குள்ளயேவா…? கரோனா வைரஸ் பெயர் படத்திற்காக பதிவு செய்யப்பட்டது!

  0
  5
  Corona Pyaar Hai

  கரோனா வைரஸால் திரையுலகமே முடங்கிக்கிடக்கும் நிலையில் ஒரு தயாரிப்பு நிறுவனம் கரோனா பெயரைப் படத்திற்கு பதிவு செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஈரோஸ் இன்டர்நேஷனல் ‘கரோனா பியார் ஹை’ என்ற பெயரைப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

  eros-international

  சினிமா வட்டாரத் தகவல்களின் படி, படத்திற்கான கதை எழுதும் வேலைகள் தொடங்கிவிட்டதாம். மேலும் இது பலமான சமூக கருத்துள்ள படமாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெட்லி கரோனா(Deadly Corona) என்ற பெயரில் ஒரு படம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கரோனா என்ற பெயரில் படத்திற்கு தலைப்பு வைக்க தயாரிப்பு நிறுவனங்கள் குவிந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

  rakesh-roshan

  ஆனால் ‘கஹோ நா பியார் ஹை’ என்று ஏற்கனவே ஒரு படம் 2000-ம் ஆண்டில் வந்துள்ளது. அந்த படத்தின் இயக்குனர் கரோனா பியார் ஹை என்ற பெயரைப் பார்த்து ஈர்க்கப்படவில்லை. மேலும் இது தன் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.