அஜீத்தையும் நாடகக் காதலன் ஆக்கிட்டாய்ங்களே… திரெளபதியால் வந்த வினை..!

  0
  2
  அஜீத் - மோகன்

  அண்ணே அவரே வேற மதத்து பொண்ணை நாடகக்காதல் பண்ணித்தான் கல்யாணம் பண்ணாரு. அப்புறம் ஏண்ணே அவர் கூட போட்டோ எடுத்தீங்க

  சமீபத்தில் வெளியான ’திரெளபதி’ பட ட்ரெய்லர் எந்த அளவு சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவதாக இன்னொரு தரப்பினர் கேலியும் கிண்டலும் செய்ததால் சமூக வலைதளங்களில் ஒரு சமுதாய போரே நடந்தது.

  mohan

  இது குறித்து இயக்குனர் ஜி.மோகன் அவ்வப்போது விளக்கம் அளித்த போதிலும் இந்த விவாதங்கள் முற்றுப் பெறவில்லை. இந்த நிலையில் ’திரெளபதி’ படத்திற்கு அஜித் வாழ்த்து தெரிவித்ததாகவும், அஜித்தும் இயக்குனர் மோகனும் இணைந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டதாகவும், ஒரு வதந்தி மிக வேகமாக பரவியது.

   

  இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குனர் ஜி.மோகன் தனது சமூக வலைத்தளபக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். ‘வதந்திகளை நம்பாதீர்.. திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே’ என்று கூறியுள்ளார்.

  draupathi

  மோகனின் இந்த விளக்கத்திற்கு ’’அண்ணே அவரே வேற மதத்து பொண்ணை நாடகக்காதல் பண்ணித்தான் கல்யாணம் பண்ணாரு. அப்புறம் ஏண்ணே அவர் கூட போட்டோ எடுத்தீங்க’’ என்று பதிலளித்து வருகின்றனர்.