அஜித், விஜய் படங்களை மிஞ்சும் பட்ஜெட்… ஷங்கருக்கே டஃப் கொடுக்கும் பிரம்மாண்டம்… சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் அலப்பறைகள்!

  0
  1
  சரவணா ஸ்டோர்ஸ்

  மேலும் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட  பலர் நடிக்கின்றனர்.

  அஜித்தின் உல்லாசம்  பட இயக்குநர்களான ஜேடி -ஜெர்ரி  இயக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் அருள் சரவணன் ஹீரோவாக  நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை  கீர்த்திகா திவாரி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட  பலர் நடிக்கின்றனர். தற்காலிகமாக புரொடக்‌ஷன் நம்பர் 1 என்ற பெயரில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு  பூஜையுடன் நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில்  நேற்று துவங்கியது. 

  ttn

  100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் பாடல் காட்சி மட்டும் சுமார் 7  நாட்கள் ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளதாம். அரண்மனை போல செட் அமைத்து மும்பையிலிருந்து மாடல் அழகிகள், டான்ஸர்கள் இறக்குமதி செய்யப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளதாம்.  இதுவரை எந்த படத்தின் பாடலும் 7 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாகச் சரித்திரமே இல்லை.

  ttn

  நவரச நாயகன் கார்த்திக் ஏசி  இல்லாமல் இருந்தால்  வியர்த்துக் கொட்டி ஒரு வழியாகி விடுவார் என்று கேள்விப்பட்டுள்ளோம். அவரையே அருள் சரவணனும் பாலோ செய்கிறார் போல…  முழுக்க முழுக்க ஏசி செட்டப் இருந்தால்  தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறாராம் அண்ணாச்சி . அவரால்  கொஞ்சம் நேரம் கூட ஏசி இல்லாமல் இருக்க முடியாதாம். இதனால்  ஈவிபி பிலிம் சிட்டியிலேயே மொத்த படப்பிடிப்பையும் முடித்தாலும் ஆச்சரியத்திற்கு இல்லை. 

  ttn

  அண்ணாச்சியின் ஆரம்பமே இயக்குநர் ஷங்கருக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதே என்று ஆச்சரியப்பட வைக்கிறது. அதுமட்டுமல்ல அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்குக் கூட இத்தனை கோடி பட்ஜெட்டும்  இல்லை, அலப்பறையும் இல்லை என்று கோலிவுட் தரப்பிலும்  முணுமுணுக்கப்படுகிறது.