அஜித் வசனங்களை பயன்படுத்தி தூத்துக்குடி காவல்துறை விழிப்புணர்வு!

  0
  13
  அஜித்

  பெண்களை பின் தொடர்தல், கேலி செய்தல் அவர்கள் விருப்பமின்றி தகாத முறையில் நடந்து கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள்

  நடிகர் அஜித் ராஜா படத்தில் பேசும் வசனமான,  “ஒரு பெண்ணோட மனசு நோகும்படி கிண்டல் செய்வது, சைகை செய்வது, வண்டியில் போகும்போது தொல்லைக் கொடுப்பது, போனில் அசிங்கமாக பேசுவது, பொதுவாக ஒரு பெண்ணோட விருப்பம் இல்லாமல் அவளை பாதிக்கிற அனைத்து விஷயங்களுமே ஈவ்டீசிங் தான்” என்ற டைலாக்கை முதலில் வைத்தும்,

  அஜித்

  அதன்பின் வேதாளம் பட வசனமான, “பெண்கள் தைரியமாக வெளியில போக முடியல, பின்னாடி எவன் வாரான் என்ற பயத்திலேயே இருக்காங்க…. போகட்டும் சார் பொன்னுங்க ஸ்கூல், காலேஜ், வேலைக்கு நிம்மதியா!  உங்களுக்கு ஒரு பெண்ணை பிடித்தால் தைரியமாக அவங்கள்ட்ட சொல்லுங்க.. அவங்களுக்கும் உங்கள பிடித்தால் கல்யாணம், பிடிக்கலனா, வெரட்டி, துரத்தி ஒத்துக்கொள்ள வைக்கிறவன் ஆம்பள இல்ல சார், அவங்க உணர்வுகளை மதித்து ஒதுங்கி போறவன் தான் சார் ஆம்பள” என வசனங்களுடன் காவல்துறையினர் விழிப்புணர்வு செய்துவருகின்றனர். 

   

   

  இப்படி காவல்துறையினர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அறிவிப்பு நோட்டீஸில்,  “பெண்களை பின் தொடர்தல், கேலி செய்தல் அவர்கள் விருப்பமின்றி தகாத முறையில் நடந்து கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள்” – இப்படிக்கு தூத்துக்குடி காவல்துறை என போஸ்ரைல் குறிப்பிடப்பட்டுள்ளது.