அஜித் ரசிகர் எரித்து கொலை: நண்பர்களின் பரபரப்பு வாக்குமூலம்!

  0
  1
  கொலை

  நேர்கொண்ட பார்வை படம் பார்க்கச் சென்ற அஜித் ரசிகர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  திருச்சி : நேர்கொண்ட பார்வை படம் பார்க்கச் சென்ற அஜித் ரசிகர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலணியைச் சேர்ந்த சண்முகநாதன். இவருக்குக் கல்யாணி என்ற மனைவியும்,  தமிழழகன் என்ற 24 வயது மகனும் உள்ளனர். அஜித்தின் தீவிர   ரசிகரான தமிழழகன் கடந்த 7ம் தேதி தனது நண்பர்களுடன்  நேர்கொண்ட பார்வை படத்துக்கு முன்பதிவு செய்வதற்காகச் சென்றார். தியேட்டருக்கு சென்ற தமிழழகன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், 10 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு செய்த போலீசார்  கடந்த 25 ஆம் தேதி சந்தேகத்தின் பேரில் தமிழழகனின் நண்பர்கள் காக்கா கார்த்திக், மணிகண்டன், ஆட்டோ டிரைவர் ஜெகன் ஆகிய மூன்று பேரையும் தேடி வந்தனர்.

  murder

  இதையடுத்து மதுபான பாரில் போதையில் இருக்கும் போது  தமிழழகனை எரித்து கொன்றதாக அவரது நண்பர்கள் உளறி உள்ளனர். இதனை அறிந்த அருகிலிருந்தவர்கள் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், மணிகண்டன் மற்றும் காக்கா கார்த்திக்கை பிடித்தனர், ஆட்டோ ஓட்டுநர் ஜெகன் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

  murder

  இந்நிலையில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் தமிழழகன், காக்கா கார்த்திக், ஜெகன்  மணிகண்டன் ஆகிய நால்வரும் நண்பர்கள். இவர்களுக்கும் பிரபாகர் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில்  அவரை குத்தி கொலை செய்ய இவர்கள் முயன்றதாகத் தெரிகிறது. இதில் பிரபாகர் தப்பியுள்ளார். இந்த வழக்கில் தமிழகனை தவிர மற்ற மூவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து நேர்கொண்ட பார்வை படத்திற்குச் செல்லும் இது தொடர்பாக நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மூவரும், தமிழழகனை அடித்து கொன்றுள்ளனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி ஆட்டோவில் எடுத்துச் சென்று பொன்மலை கணேசபுரம் சுடுகாட்டில் வைத்து  எரித்துள்ளனர். பின்னர் எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு வந்துள்ளனர். இதையடுத்து  3 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.