அஜித் பட இயக்குநரோடு கைகோர்த்த பிக் பாஸ் ஆரவ்!

  0
  1
  நடிகர் ஆரவ்

  நடிகர் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் போஸ்டர் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

  சென்னை: நடிகர் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்வ. அதையடுத்து நரேஷ் சம்பத் இயக்கத்தில் எஸ்.மோகன் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள ராஜா பீமா படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுயடைந்து தற்போது ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. 

  aarav

  இதற் கிடையில் ஆராவின் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்க்கெட் ராஜா Mbbs என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் சரண் இயக்கிவருகிறார். இதில் டானாக  நடித்து வரும் ஆராவுக்கு ஜோடியாக காவ்யா தபூர் நடிக்கிறார். 

  aarav

  மேலும் ராதிகா சரத்குமார், நாசர், யோகி பாபு, ஷாயாஜி ஷிண்டே, சாம்ஸ் உள்ளிட்ட என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

  முன்னதாக இயக்குநர் சரண் அஜித்தை வைத்து அமர்க்களம், காதல் மன்னன், அட்டகாசம் போன்ற படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.