அஜித் இன்னும் நடிக்கிறாரா? அஜித் ரசிகர்களை கடுப்பேற்றிய விஜய் பட நாயகி?!

  0
  6
  நடிகை இஷா கோபிகர்

  நடிகர் அஜித் குறித்து  நடிகை இஷா கோபிகர் பேசியது அவரது  ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை: நடிகர் அஜித் குறித்து  நடிகை இஷா கோபிகர் பேசியது அவரது  ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

  தமிழில், அகத்தியன் இயக்கிய காதல் கவிதை, அரவிந்த் சாமி நடித்த, என் சுவாசக் காற்றே, விஜயகாந்தின் நரசிம்மா, விஜய்-யின் நெஞ்சினிலே உட்பட சில தமிழ்ப் படங்களில் நடித்தவர் இந்தி நடிகை இஷா கோபிகர். இவர் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மூலம் தமிழுக்கு திரும்புகிறார் இஷா கோபிகர்.

  isha ttn

  இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த இஷா கோபிகர், ‘சிவகார்த்திகேயனைப் பார்க்கும்போது எனக்கு ரஜினிதான் நினைவுக்கு வருகிறார். அவருடைய மேனரிசத்தை வைத்து நான் கூறவில்லை. ரஜினியைப்போல் அவர் நடிக்க விரும்புகிறார் என்ற அர்த்தத்திலும் சொல்லவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவரை பார்க்கும் போது ரஜினியை ஞாபகப்படுத்துகிறார். 18 வருடங்களுக்கு முன் நான் தமிழில் நடித்த நடிகர்கள் தற்போது பெரிய நடிகர்களாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விஜய் முதலிடத்தில் இருக்கிறார். அரவிந்த் சாமி எனக்கு பிடித்த நடிகர்’ என்று இஷா கோபிகர் கூறியுள்ளார். ரஜினியையும், சிவகார்த்திகேயனையும் அவர் ஒப்பிட்டுப் பேசியது  ரஜினி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

  isha

  இதையடுத்து அஜித் குறித்த கேள்விக்கு பதிலளித்த இஷா கோபிகர், ‘எனக்கு அஜித்தைப் பிடிக்கும். ஆனால் அவர் இன்னும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள் இஷா கோபிகரை  சமூகவலைதளங்களில் வசைபாடி வருகின்றனர்.

  isha ttn

  முன்னதாக கடந்த ஜனவரி மாதம்  மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் இஷா கோபிகர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.