‘அசுரன் வேற லெவல்’ : குட்டி அஸ்வந்த் என்ன சொல்லுறாருன்னு கேளுங்க!

  0
  3
   அஸ்வந்த்

  அசுரன் திரைப்படம் குறித்து மழலை நடிகர் அஸ்வந்த் கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

  அசுரன் திரைப்படம் குறித்து மழலை நடிகர் அஸ்வந்த் கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

  வெற்றிமாறன் – தனுஷ் இருவரின் வெற்றி கூட்டணியில் உருவாகிய அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. கலைப்புலி.எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள  இப்படம் பூமணி எழுத்தில் வெளியான வெக்கை நாவலை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ளது.

  asuran

  இதில் மலையாள நடிகை  மஞ்சு வாரியர் , பிரகாஷ் ராஜ் , பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

   

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  Watched #asuran premiere in london ? Dhanush sir & Vetrimaran sir Kili Kilinu Kilichitanga ??

  A post shared by Ashwanth Ashokkumar (@actorashwanth) on

  இந்நிலையில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் மூலம் நடிகராக மாற்றியுள்ள அஸ்வந்த்  அசுரன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அசூரன் படத்தின் பிரிமியர் ஷோவை லண்டனில் பார்த்தோம். யார் யார் பார்த்தோம்னு தெரியுமா? நான், தனுஷ் சார், கார்த்திக் சுப்புராஜ் சார், எங்க d40 டீம் மொத்தமா  பார்த்தோம். வெற்றிமாறன் சாரும், தனுஷ் சாரும் சும்மா கிழி கிழினு கிழிச்சிட்டாங்க, படம் வேற லெவல்’ என்று கூறியுள்ளார்.

  d40

  அஸ்வந்த் தற்போது தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.