அசுரனுக்கு பிறகு கர்ணன்: இயக்குநர் மாரி செல்வராஜுடன் இணையும் தனுஷ்

  0
  1
  தனுஷ்

  இதுவரை வெளிவந்த சாதிய பிரிவினைகள், கொடுமைகளுக்கு எதிரான படங்களிலிருந்து பல வகைகளில் இப்படம் வேறுபட்டே இருந்தது

  பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவரை வெளிவந்த சாதிய பிரிவினைகள், கொடுமைகளுக்கு எதிரான படங்களிலிருந்து பல வகைகளில் இப்படம்  வேறுபட்டே இருந்தது. மாரி செல்வராஜ், ஒரு எழுத்தாளராக முன்பே கவனம் ஈர்த்தவர்.

  pariyerum perumal

  இயக்குநர் ராமின் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் ‘ஜார்ஜ்’ என்ற பெயரை ‘சார்ஜ்’ என்று சொல்லும் மாணவராக வருவார். தற்போது தன்னை ஒரு முழுமையான இயக்குநராக அவர் தமிழ் சினிமாவில்  நிலை நிறுத்தியுள்ளார். 

  maari

  இந்நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்கிறார்.  மேலும் இப்படத்திற்கு கர்ணன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

   

  கடந்த 64 நாட்களாக லண்டனில்  இயக்குநர்  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  D40 படத்தில் பிஸியாக  நடித்து வந்த தனுஷை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் லண்டன் சென்று சந்தித்த மாரி செல்வராஜ் அங்கேயே படத்தின் ஸ்கிரிப்ட், மற்றும் பாடல் கம்போஸிங்கை முடித்துள்ளார்.இதை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். 

  மேலும் D40 டீமுடன் சேர்ந்து தற்போது சென்னைக்கு திரும்பியுள்ள மாரி செல்வராஜ் விரைவில் படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  mari

  சமீபத்தில் அசுரன் படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தனுஷ், தற்போது மாரி செல்வராஜுடன் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.