அசாம் வெள்ள பாதிப்பு: நடிகர் அமிதாப் பச்சன் நிதியுதவி!

  0
  2
  நடிகர் அமிதாப் பச்சன்

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு  நடிகர் அமிதாப் பச்சன் நிதியுதவி அளித்துள்ளார். 

  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்திற்கு  நடிகர் அமிதாப் பச்சன் நிதியுதவி அளித்துள்ளார். 

  flood

  வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கனமழையின் காரணமாக அசாம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்த கனமழையால்  அசாமில்  64 பேரும், பீகாரில் 102 பேரும்  பலியாகியுள்ளனர். மனிதர்கள் மட்டுமில்லாது கஜிரங்கா தேசிய பூங்காவிலிருந்த  141 விலங்குகளும் இந்த கனமழைக்கு இரையாகியுள்ளன.

  assam

  குறிப்பாகப் பீகாரில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 72 லட்சம் பேரும், அசாமில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 38 லட்சம் பேரும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் உணவு, குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இருப்பினும் மக்களின் தேவையை உணர்ந்து பலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றனர். மேலும் கனமழையால் அசாம் மாநிலம் அதிகளவு இழப்பை சந்தித்துள்ளதால்  மக்கள் உதவ முன்வரவேண்டும் என்று அம்மாநில அரசு வேண்டுகோள் வைத்தது. இதையடுத்து நடிகர் அக்ஷய்குமார் அசாம் வெள்ளத்துக்கு ரூ.1 கோடி நிதி அளித்தார்.  

   

  இந்நிலையில்  அக்ஷய்குமாரை தொடர்ந்து  நடிகர் அமிதாப் பச்சன் ரூ.51 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இந்த தொகையை அவர் அசாம் முதல்வர்  நிவாரண நிதிக்கு  அனுப்பி வைத்துள்ளார். இதற்கு அசாம் முதல்வர்  சர்பானந்த சோனாவால் அமிதாப் பச்சனுக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.