அசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்!?

  0
  12
  ராகுல் ஷர்மா

  நடிகை அசினின் கணவரும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ராகுல் ஷர்மா எலெக்ட்ரிக் பைக் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

  சென்னை: நடிகை அசினின் கணவரும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ராகுல் ஷர்மா எலெக்ட்ரிக் பைக் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

  இந்தியாவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. தற்போது இந்நிறுவனத்தின் 5 இணை நிறுவனர்களில் ஒருவரான ராகுல் ஷர்மா எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். 

  ரிவோல்ட் இன்டெலிகார்ப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனத்திற்கு ரூ.400 முதல் ரூ.500 கோடி வரை ராகுல் ஷர்மா முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

  இதுகுறித்து ராகுல் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வாடிக்கையாளர்களுக்குச் சரியான விலையில் சிறந்த எலெக்ட்ரிக் பைக் மாடல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். எங்களது மின்சார பைக்குக்கள் பெட்ரோல் பைக்குகளுக்கு இணையான செயல்திறனை வழங்கும் நோக்கோடு உருவாக்குகிறோம். இதில் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பவில்லை. எப்படி ஸ்மார்ட்ஃபோன் வணிகத்தில் ஒரே நேரத்தில் மைக்ரோமேக்ஸ் சிறப்பாகச் செயல்பட்டதோ அதே போன்று ரிவோல்ட் இந்திய  வாகனமும் சந்தையில் மிகப் பெரிய புரட்சியை உண்டாக்கும் என்று கூறியுள்ளார்.

  rahul sharma

  ஹரியானா மாநிலம், மானேசரில் 1 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டு இருக்கும் ஆலையில் ரெவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி செய்யப்பட வருகிறது’ என்று கூறியுள்ளார். மேலும் இந்த எலக்ட்ரிக் பைக் வரும் ஜூன் மாதம் அறிமுகமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

  இதையும் படிங்க: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, சுகாதார நலன்கள்; கூகுள் அதிரடி அறிவிப்பு!