அக்.2 முதல் 30 முதல் பாத யாத்திரை! பாத யாத்திரை முடியும்போது தமிழக மக்களிடையே மாற்றம் ஏற்படும் – கொளுத்திப்போடும் பொன்னார்!! 

  0
  1
  Pon Radhakrishnan

  பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மற்றும்  தேசிய செயல் தலைவர் ஜேபி. நட்டா ஆகியோர்  இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக  மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

  பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மற்றும்  தேசிய செயல் தலைவர் ஜேபி. நட்டா ஆகியோர்  இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக  மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ளா பாஜக மாநில நிர்வாகிகளுடனும் சென்னை தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம்  உரையாடினர். இந்த நிகழ்வில் பா.ஜ.க முன்னாள் மத்திய இணை அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன்,  பா.ஜ.க மூத்த தலைவர் இல கணேசன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

  நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன், “மகாத்மா காந்தி அவர்களின் 150வது பிறந்தநாள் விழா கொண்டாட பட உள்ளது ,அவரின் தியாகத்தை எடுத்துரைக்கும் விதமாக அக்டோபர் 2ம் தேதி 30ம் தேதி வரை நாடு முழுவதும் பாத யாத்திரையை தொடங்க உள்ளோம். இதில் பல மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். கட்சி பாகுபாடு இல்லாமல் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் பங்கேற்கலாம். 

  pon radha

  யாத்திரை முடியும் போது உலகம் முழுவதும் நடைபெற்ற யாத்திரை விட மிகப் பெரிய யாத்திரையாக இது அமையும். இந்த யாத்திரை முடியும் போது மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்படும். தமிழக மக்கள் தூய்மை , நேர்மைக்காகதான் ஏங்கி நிற்கின்றனர். கட்சி தலைமையின் அறிவிப்பின் பேரில் இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம். தமிழகத்தில் பாஜக உறுப்பினர்கள் மட்டும் 50 லட்சம் பேர் உள்ளனர்.