அக்‌ஷரா ஹாசன் அந்தரங்க புகைப்படம் லீக்: முன்னாள் காதலரின் சதி?

  0
  3
  aksharahaasan

  அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் செய்தது அவரது முன்னாள் காதலரின் வேலையா என்ற கோணத்தில் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மும்பை: அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் செய்தது அவரது முன்னாள் காதலரின் வேலையா என்ற கோணத்தில் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளும், நடிகையுமான அக்ஷரா ஹாசன் கடந்த 2015ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தல அஜித்தின்விவேகம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் களமிறங்கினார். தற்போது விக்ரம் நடித்து வரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் அக்‌ஷரா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  இந்நிலையில், அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் சில இணையத்தில் லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இந்தப் புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரம் குறித்து மும்பை போலீஸில் புகார் அளித்திருப்பதாகவும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு  வருவதாக அக்ஷரா ஹாசன் கூறியிருந்தார்.

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  @mumbaipolice @cybercrime_cell

  A post shared by Akshara Haasan (@aksharaa.haasan) on

  இந்நிலையில், அக்‌ஷரா அளித்த புகாரின் அடிப்படையில், மும்பை வெர்சோவா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் அக்‌ஷரா ஹாசனின் முன்னாள் காதலர் தனுஜ் விர்வாணியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த 2013ம் ஆண்டு முதல் அக்‌ஷரா பயன்படுத்தி வரும் ஐபோன் 6-ல் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அதே ஆண்டு இந்த புகைப்படங்கள் தனுஜ் விர்வாணிக்கு பகிரப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  akshara

  இதனிடையே, அக்‌ஷராவின் அந்தரங்க புகைப்படங்களை தான் வெளியிடவில்லை என தனுஜ் கூறியுள்ளார். இருவரும் காதலித்தோம் தற்போது பிரிந்துவிட்டு நல்ல நண்பர்களாக இருக்கிறோம் என தனுஜ் தெரிவித்துள்ளார். கமல், ரஜினியுடன் நடித்த நடிகை ரதி அக்னிஹோத்ரியின் மகன் தனுஷ் விர்வாணி என்பது குறிப்பிடத்தக்கது.