‘அக்னி சிறகுகள்’ பட டீமுடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல் மகள்!

  0
  1
  'அக்னி சிறகுகள்'

  கடாரம் கொண்டான் படத்தில் அக்ஷராவின் நடிப்பு வரவேற்பு பெற்ற  நிலையில்  தற்போது அவர் அக்னி சிறகுகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

  அக்னி சிறகுகள் படக்குழுவுடன்  நடிகை அக்ஷரா ஹாசன்  தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். 

  ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் திரைப்படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன், பிக் பாஸ் 3 புகழ் மீரா மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

  akshara

  அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.  கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஐரோப்பாவில் தொடங்கியது.  இப்படத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் இணைந்துள்ளார்.

  akshara

  இவர் சமீபத்தில் நடித்திருந்த கடாரம் கொண்டான் படத்தில்  அக்ஷராவின் நடிப்பு வரவேற்பு பெற்ற  நிலையில்  தற்போது அவர் அக்னி சிறகுகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

  இந்நிலையில் அக்ஷரா ஹாசனின் தனது பிறந்தநாளை அக்னி சிறகுகள் படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  இப்படத்தின் ஷூட்டிங் ஐரோப்பா, டென்மார்க், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில்  தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.