ஃபேஸ் புக்கில் நமக்கு லைக்ஸ் அதிகம் வரலயேன்னு கவலையா… இனி கவலையை விடுங்க .

  0
  9
  பேஸ் புக் லைக்

  பேஸ் புக்கினால் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் பயனாளர்களுக்கு புதிய அப்டெட் ஒன்றை சோதனை முறையில் செயல்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

  பேஸ் புக்கினால் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் பயனாளர்களுக்கு புதிய அப்டெட் ஒன்றை சோதனை முறையில் செயல்படுத்த ஃபேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

  அண்மையில் இன்ஸ்டாகிராம்,வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனங்கள் புதிது புதிதாக அப்டேட்களை வழங்கி அசத்தி வருகிறது.இதனைத் தொடர்ந்து பேஸ் புக் நிறுவனமும் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஒரு புதிய சோதனை முயற்சியைத் தொடங்க உள்ளதாக அறிவித்திருக்கிறது.இதன்படி இனி பேஸ் புக்கில் நாம் பகிரும் வீடியோ மற்றும் கருத்துகளுக்கு வரும் லைக்ஸை நாம் மட்டும் பார்க்கும்படி மறைத்துக் கொள்ள இயலும்.சில பயபுள்ளைக எனக்குத்தான் எவ்வளவு லைக்ஸ் வந்தது தெரியுமான்னு பீத்திக்கவும் முடியாது…அவனுக்கு அல்லது அவளுக்கு மட்டும் இவ்வளவு லைக்ஸ் வருது நம்மள யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாய்ங்களே என்று நொந்துகொள்ளவும் இனி வேலையிருக்காது!

  பேஸ் புக்

  இந்த சோதனை முயற்சி தொடங்கி சில நாட்களுக்கு, இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து கருத்துகளைச் சேகரிக்க உள்ளதாக பேஸ் புக் நிறவனம் தெரிவித்தது. இந்த புதிய முயற்சியின் நோக்கம் பேஸ் புக் பயனாளர்கள் தங்களுக்கு வரும் லைக்ஸை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காமல், பகிர நினைக்கும் அனைத்தையும் எந்த ஒரு எதிர் பார்ப்புமின்றி பகிர வேண்டும் என்பது தான் என்று விளக்கம் கொடுத்திருக்கிறது.

  இன்ஸ்டாகிராமிலும் இதே போன்று லைக்ஸை மறைக்க ஒரு சோதனை முயற்சி கனடாவில் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.தற்போது அந்த வசதியைப் பயன்படுத்தி  அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் லைக்ஸ்களின் எண்ணிக்கையை பிறருக்கு தெரியாமல் மறைக்க முடியும்.

  பேஸ் புக் லைக்ஸ்

  உங்களுக்கு ஒரு விசயத்தை மறைக்காமல் சொல்லணும் என்றால்,இந்த சோதனை முயற்சி இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கவிருக்கிறது… சக்ஸஸ் ஆன பிறகுதான் நம்ம ஊருக்கு கொண்டு வருவார்களாம்! அதுவரைக்கும் அடுத்தவங்களுக்கு கிடைக்கிற லைக்ஸ் ,கமெண்ட்டைப் பார்த்து பெருமூச்சு விட வேண்டியதுதான்… வேறென்ன செய்ய..!?