ஃபேஸ்புக் காதல் : கர்ப்பமாக்கி விட்டு சிறுமியை ஏமாற்றிய காதலன்!

  0
  2
  Rape

  இவளுக்கு ஃபேஸ்புக்கில் ராதாகிருஷ்ணன் என்ற ஒரு நண்பர் கிடைத்துள்ளார்.

  பெரியவர்கள் அல்லாது சிறுவர்களிடமும் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் ஆரம்பித்து அதன் மூலம் உருவான காதல் கதைகள் பல. நெல்லை மாவட்டம் ராஜபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் காளியம்மாள் தம்பதியினர் இறந்து போன தன் மகளின் நினைவாக மரம் நடும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் இளைய மகளும் மரம் நடுவதில் ஆர்வம் ஏற்பட்டு தன் படிப்பை 10 ஆம் வகுப்போடு முடித்துக் கொண்டுள்ளார்.

  Tree

  மரங்கள் நடுவதைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள அர்ஜுனன் அவரது மகளுக்கு ஆண்டிராய்ட் போன் வாங்கி கொடுத்துள்ளார். 

  Tree

  புதுசா செல்போன் கையில் கிடைச்சாலே எல்லாருக்கும் குஷி தான். அதே போல, இந்த சிறுமியும் ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட அனைத்திலும் அக்கவுண்ட் ஓபன் செய்து உபயோகித்து வந்துள்ளார். இவளுக்கு ஃபேஸ்புக்கில் ராதாகிருஷ்ணன் என்ற ஒரு நண்பர் கிடைத்துள்ளார்.

  Facebook

  அந்த சிறுமி தினமும் அவருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். நாட்கள் போக, அந்த நட்பு காதலாக மாறியுள்ளது. மரம் நடுவதில் அவ்வளவாகப் பணம் கிடைக்காததால் வேலை வேண்டும் என்று இந்த சிறுமி கேட்டுள்ளார். அதனால், ராதாகிருஷ்ணன் அந்த சிறுமையை வேலை வாங்கி தருவதாகக் கூறி சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து கோயம்புத்தூர் அழைத்து சென்று 4 நாட்கள் ஒரு விடுதியில் தங்க வைத்து, அந்த சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். 

  Rape

  இது குறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமி , ‘வேலை வாங்கு தருவதாகக் கூறி அழைத்துச் சென்று தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தற்போது அவள் கர்ப்பமாக உள்ளதாகவும் இதே போல அவர் வேறு எந்த பெண்ணிடமாவது நடந்து கொண்டுள்ளாரா என்று தெரியவில்லை. அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த சிறுமியின் தந்தை இந்த சம்பவம் குறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய காவல்துறையினர், அந்த சிறுமியை ஏமாற்றிய நபரை விரைவில் கைது செய்வோம் என்று தெரிவித்துள்ளனர்.