ஃபேஸ்புக்குடன் இணைக்கப்படும் ஆதார் எண்? 

  0
  1
  Facebook aadhar

  பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

  பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

  பேஸ்புக் பயனாளரின் விவரத்துடன் ஆதார் எண்ணையும் இணைக்கக்கோரி சென்னை, மும்பை, மத்திய பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேஸ்புக் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, பேஸ்புக் ஒரு சர்வதேச நிறுவனம் என்றும் இந்த சமூக வலைதளத்தை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருவதாகவும் கூறினார்.

  facebook

  மேலும்  பேஸ்புக் வாயிலாக பல்வேறு குற்றங்கள் நடக்கிறது என வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது எனக்கூறிய அவர்,   பேஸ்புக் மூலம் பல நல்ல சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டார். தற்போது ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றவேண்டும் என்றும் முகுல் ரோத்தகி கோரிக்கை விடுத்தார்.  இந்த வழக்கை விசாரித்த தீபக் குப்தா அமர்வு, தனிப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக சமூக வலைதளத்தை குற்றஞ்சாட்ட முடியுமா? எனக் கேள்வி எழுப்பினர். ஃபேஸ்புக் நிறுவனத்தின் மனு மீது பதிலளிக்க ட்விட்டர், கூகுள், யூடியூப் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.