kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Blog posts
பிளஸ் 1, பிளஸ் 2விற்கு இனி 500 மதிப்பெண்களுக்கே தேர்வு! தமிழக அரசு அதிரடி 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமிழக அரசு புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி 600 மதிப்பெண்களுக்கு பதிலாக இனி 500 மதிப்பெண்களுக்கே பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 2020-2021 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக 6 பாடங்களானது 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாணையின்படி 6 பாடங்கள், 5 பாடங்களாக குறைக்கப்பட உள்ளன. பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தில் தற்போது ஒவ்வொரு பிரிவிலும் 6 பாடங்கள் இடம் பெறுகின்றன. மருத்துவம் மற்றும் பொறியியல் இரண்டுக்கும் சேர்த்து படிக்கக்கூடிய வகையில் பாடப்பிரிவுகள் தற்போது இருக்கின்றன. அதாவது, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என ஆறு பாடங்கள் இருக்கின்றன. இந்த பிரிவை தேர்வு செய்யும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் என இரண்டு துறைகளுக்கும் செல்ல முடியும். தற்போது,  இந்த பிரிவிலிருந்து கணிதப்பாடம் நீக்கப்பட இருக்கிறது. அதன்படி மருத்துவ படிப்பிற்கு மட்டும் செல்லக்கூடிய மாணவர்கள் இந்த பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல் பொறியியல் துறை சார்ந்த படிப்புகளுக்கு செல்லக்கூடிய மாணவர்களுக்கு, தமிழ் , ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் என ஐந்து பாடங்கள் மட்டும் இருக்கும். வணிகவியல் பிரிவை தேர்வு செய்யக்கூடிய மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம் வணிகவியல், பொருளியல், கணக்குப்பதிவியல் என ஐந்து படங்கள் மட்டும் இருக்கும்.

தேர்வு

கணக்குப்பதிவியல் பிரிவாக இருந்தால் , தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணக்குப் பதிவியல் தணிக்கையியல் கணினி தொழில்நுட்பம் என ஆறு பாடங்கள் இருக்கின்றன. இதில்,  கணினி தொழில்நுட்பம் பாடம் நீக்கப்பட்டு 5 பாடங்கள் மட்டும் இடம்பெற உள்ளன. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் இருக்கக்கூடிய 6 பாடங்கள் 5 பாடங்களாக குறைக்கப்பட்டு, தலா 100 மதிப்பெண்கள் என,  500 மதிப்பெண்களாக குறைக்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கு இந்த மாற்றம் அமலுக்கு வராது என்றும், 2020 - 21 கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

aishwarya Wed, 09/18/2019 - 20:45
Exam Higher secondary தேர்வு தமிழகம் உணவு பிக்பாஸ் சீசன் 3

English Title

New syllabus for higher secondary

News Order

0

Ticker

1 
Vikram singh saini

நேருவின் குடும்பமே காமவெறி பிடித்தது! வசைப்பாடிய பாஜக எம்.எல்.ஏ 

இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவை பெண் பித்து பிடித்தவர் என்றும், அவருடைய குடும்பமே காமவெறி பிடித்த குடும்பம் என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. விக்ரம் ச...

மீண்டும் தலைதூக்கும் ரூட் தல விவகாரம்! மின்சார ரயிலின் சங்கிலியை இழுத்த மாணவர்கள்!! 

சென்னையில் ரூட் தல கலாச்சரம் மீண்டும் தலைத்தூக்கியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் இருந்து பேருந்து அல்லது ரயிலில் ஏறும் மாணவர்கள், தங்கள் கல்லூரியை அடையும் வரை அந்த பேருந்து செல்லும் வழி முழுவதிற்கும் நான் தான் கெத்து என்று காட்டுவதற்காக படியில் தொங்குவது, பெண்களை வம்பிழுப்பது, படிக்கட்டில் சாகசம் செய்வது, நக்கலடிப்பது, பேருந்தின் மேற்கூரையில் ஏறி அராஜகம் செய்வது, பேருந்து தினம் கொண்டாடுவது, கானா பாடலை பாடி குதூகளிப்பது இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.... ரூட்டுதலயின் செயல்பாடுகளை.... அந்த ஒரு ரூட்டு தல... டான்... யார் என்பதில்தான் மாணவர்களிடையே போட்டி... இத்தகைய ரூட் தல கலாச்சாரம் கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த நிலையில் தற்போது விஸ்ரூபம் எடுத்துள்ளது.  

chennai beach

ரூட் தல விவகாரத்தில் சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். சுமார் 20 மாணவர்கள் கைகளில் கத்தியுடன் நேருக்கு நேராக மோதிக்கொண்டுள்ளனர். மேலும் ரயில் அபாய சங்கிலியை இழுத்து கீழே இறங்கி மாணவர்கள் சரமாரி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனைப்பார்த்த பயணிகள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். மோதல் தொடர்பாக மாநில கல்லூரியை சேர்ந்த 15 மாணவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. 

aishwarya Wed, 09/18/2019 - 19:56
Route thala issue Route thala தமிழகம்

English Title

route thala issue again started

News Order

0

Ticker

1  
BIGIL

உனக்காக வாழ நினைக்குறேன்.. உசுரோட வாசம் பிடிக்குறேன்..! அசத்தும் பிகில் பாடல் 

விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளா நிலையில் இன்று உனக்காக என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

திருட வந்த இடத்தில் உல்லாசமாக ஊஞ்சலாடிய திருடன்!

விழுப்புரத்தில் வீட்டில் திருட வந்த திருடன் உல்லாசமாக ஊஞ்சலாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. 

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சுதாகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆசிரியர் இளங்கோ. இவர் கடந்த ஓர் ஆண்டுகளாக தொடர்ந்து தங்கள் பகுதிகளில் திருட்டு நடந்து வந்ததால், தனது வீட்டை சுற்றி 6 இடங்களில் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளார். அவருடைய பக்கத்துவீட்டு காரரின் இருசக்கரவாகனத்தில் பெட்ரோல் திருடப்பட்டதாக வந்த புகாரையடுத்து அவருடைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.  

cctv

அப்போது, இளைஞர் ஒருவர், பைக்கில் உள்ள பெட்ரோலை திருடிவிட்டு மாடிக்கு சென்றுள்ளார். அங்கு ஏதாவது பொருட்கள் உள்ளனவா என தேடி பார்த்துள்ளார் அங்கு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து உல்லாசமாக ஊஞ்சல் ஆடியுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் உள்ள அடையாளங்களை கொண்டு காவல்துறையினர் திருடனை தேடிவருகின்றனர். 
 

aishwarya Wed, 09/18/2019 - 19:20
CCTV Theft தமிழகம்

English Title

CCTV Released

News Order

0

Ticker

1 பொதுத்தேர்வு: குழந்தைகளுக்கு தேர்வு பயத்தைக் காட்டுகிறது - கமல்ஹாசன்!

5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன், “ தும்பியின் வாலில் பாறைக்கல்லைக் கட்டி பறக்கவிடுவது எவ்வளவு கொடுமையோ அதைவிட கொடுமையானது, பத்து வயது பையன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமையை கட்டிவைப்பது. இந்த கல்வித் திட்டம் எதைச் சொல்லிக் கொடுக்கிறதோ இல்லையோ, மன அழுத்தத்தைச் சொல்லிக்கொடுக்கும்.

kamal

இந்தத் திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகமாகாது. மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தேர்வு பயமும் மன அழுத்தமுமே அதிகரிக்கும்.  சாதிகளாலும், மதங்களாலும் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைவிட, மதிப்பெண்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்பொழுது பாதிப்பு அதிகமாக இருக்கப்போகிறது. இந்தப் பாதிப்பு சமூகத்தில் எதிரொலிக்கும்போது, ஒரு குழந்தை இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியே இல்லையோ என்று தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கிப் போகும்.

 


மாணவர்களின் எதிர்காலத்திற்கு எந்த விதத்திலும் பயன் தராத 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.  நான், எட்டாவதோடு படிப்பை நிறுத்தியதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால், இனி எந்த ஒரு குழந்தை படிப்பை நிறுத்தினாலும் அதற்கு நீங்கள் அமல்படுத்தும்  பொதுத்தேர்வு தான் காரணம்” என தெரிவித்துள்ளார். 

aishwarya Wed, 09/18/2019 - 19:07
kamalhassan Kamalhassan தமிழகம்

English Title

Kamalhassan Speaking about 5,8th public exam

News Order

0

Ticker

1 இந்தி திணிப்பு: போராட்டத்தை வாபஸ் பெற்ற ஸ்டாலின்!

இந்தி குறித்து அமித்ஷா கூறியதற்கு எதிராக செப்.20ஆம் தேதி திமுக நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இந்தி தினத்தையொட்டி, வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடக இந்தியா இருந்தாலும் அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு, இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாட்டின் ஒரே மொழியாக இந்தியை அறிவித்தால் மட்டுமே உலகில் இந்தியாவை அடையாள படுத்த முடியும் என்றும் அமித்ஷா கூறியிருந்தார். அவருடைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் பாஜக இந்தியை நுழைக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டினர். 

MKS

இந்தி திணிப்பு எதிராக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் செப்டம்பர் 20 ஆம் தேதி போராட்டம் நடத்த திமுகவினர் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,  “எந்த நிலையில் இந்தி திணிக்கப்பட்டாலும் திமுக எதிர்க்கும். தமிழகம். அமித்ஷா தாய்மொழியை தாண்டி எந்த மொழி படித்தாலும் அது இந்தியாக இருக்க வேண்டும் என விளக்கமளித்தது திமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அமித்ஷா சொன்ன கருத்து தவறாக புரிந்துகொள்ளபட்டுள்ளதாக ஆளுநர் கூறினார். எனவே வருகிற 20 தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தர்காலிகமாக ஒத்துவைக்கப்படுகிறது” என்று கூறினார். 

aishwarya Wed, 09/18/2019 - 18:59
mk stalin MKS தமிழகம் உலகம்

English Title

MK Stalin press meet

News Order

0

Ticker

1
 ரூ40 லட்சம்

வங்கியின் அலட்சியத்தால் ரூ40 லட்சம் தொகுதி நிதி அம்பேல்! திடீர் லட்சாதிபதியான குடும்பம்!

ஆட்டோ ஓட்டுநர்கள் மறதியால் பயணிகள் வைத்த கிலோ கணக்கான நகைகளை திரும்ப ஒப்படைத்த செய்திகளைப் படித்திருக்கிறோம். பள்ளி சிறுவர்கள், பள்ளி செல்லும் சாலைகளில் ரோட்டில் கிடந்த விலைமதிக்க ...

சிறையிலிருந்து தாய் மொழிக்காக போராடும் ப.சிதம்பரம்!

இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தி தினத்தையொட்டி, வெவ்வேறு மொழிகளை கொண்ட நாடக இந்தியா இருந்தாலும் அனைத்து மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு, இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். நாட்டின் ஒரே மொழியாக இந்தியை அறிவித்தால் மட்டுமே உலகில் இந்தியாவை அடையாள படுத்த முடியும் என்றும் அமித்ஷா கூறியிருந்தார். அவருடைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் பாஜக இந்தியை நுழைக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டினர். 

pc

இந்நிலையில்,  முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சிறையிலிருந்து தமிழுக்காக குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில்,  “தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம். இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும். எல்லா மொழியின் வளர்ச்சிக்கும் நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஆனால், இந்திய மக்களை ஒருங்கிணைப்பதே இந்தி மொழிதான் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என பதிவிட்டுள்ளார். 

aishwarya Wed, 09/18/2019 - 18:45
p chidambaram PC தமிழகம்

English Title

p Chidamnaram Tweet

News Order

0

Ticker

1
2018 TopTamilNews. All rights reserved.