• July
    22
    Monday

Main Area

vijay's blog
sakada yogam

என்னதான் உழைச்சாலும் கையில சல்லிக்காசு தங்கலையா? இந்த தோஷத்தை கண்டறிந்து பரிகாரம் செய்தால் அள்ளஅள்ளப் பணம் தான்!

சகடை தோஷம் என்றால் என்ன?அதற்கான, அந்த தோசம் நிவர்த்தி ஆவதற்கான விதிவிலக்குகள் என்ன??

புராணங்கள் சொல்லும் போகி பண்டிகையின் கதை 

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பதுபோகி பண்டிகையில் மறைந்துள்ள தத்துவமாகும்.

indhiran

போகி பண்டிகைக்கும் இந்திர தேவன்  மற்றும் கிருஷ்ண பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். ஆணவத்தில் திகைத்த இந்திரனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார் பகவான் கிருஷ்ணர்.

கிருஷ்ணர்  தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார். அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். 

bhogi festival

இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். மூன்று நாட்களுக்கு நீடித்தது அந்த மழை அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

அதன் பின் பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன் கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல் இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார். இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.

bhogi festival

போகி தினம் பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டும்.

பொங்கலிடுவதற்கு முன்னர் வீட்டின் கூரையில் வேப்பிலை, பூலாப்பூ, கருந்துளசி, ஆவாரம்பூ கொத்துகளைச் சொருகி, சுற்றியுள்ள ஆன்மாக்களை வீட்டருகே வரச் செய்வார்கள். போகிப்பண்டிகை தினம் ஆன்மாக்களை மகிழ்விக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதுவே அன்றைய காலங்களில் பின்பற்றப்பட்ட நம்பிக்கை ஆகும் . 

இந்திரனுக்கு போகி என்றொரு பெயர் உண்டு. போகி என்றால் மகிழ்ச்சியானவன் போகங்களை அனுபவிப்பவன் என்று பொருள். நல்ல விளைச்சலைக் கண்டு மகிழும் வேளாண்மை மக்கள் பொங்கல் திருவிழாவைக் கொண்டாடத் தயாராகும் தலைவாசல் விழாவே போகி பண்டிகை எனப்படுகிறது.

bhogi

போகிக்கு முந்தைய நாளில் வீடு வெள்ளையடிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படும். போகிப் பண்டிகை அன்று அதிகாலையில் நிலைப்பொங்கல் வைக்கும் வழக்கம் இன்றும் நமது தென்மாவட்டப் பகுதிகளில் இருக்கிறது. 

முந்தையக் காலங்களில் எல்லாவிதக் குறிப்புகளும் பனையோலை ஏட்டில்தான் எழுதப்படும். இலக்கியங்களும், புராணங்களும்கூட பனையோலையில்தான் இருந்துவந்தன.

படித்தவர்களின் வீட்டில் பரணெங்கும் கிடந்த இந்தப் பனையோலைகள் யாவும் இந்த கிடந்த நாளில் எடுக்கப்பட்டு, சிதைந்துபோன ஏடுகள் நீக்கப்பட்டு, மீதமிருந்த ஓலைகள் புதிதாகக் கட்டப்படும். 

bhogi

சிதைந்து போன ஓலைகளில் இருந்த விஷயங்கள் புதிதாக எழுதப்படும். சிதைந்த ஓலைகள் தீயிலிட்டுக் கொளுத்தப்படும். இதுவே போகியன்று தீ மூட்டும் வழக்கமாக மாறியது என்றும் சொல்லப்படுகிறது.

நம்முடன் மற்றவர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தும் பொருள்களைக் கொளுத்தினால், நாம் இன்னும் நம் கடவுளைப் பற்றியும், நம்முடைய சடங்குகள் பற்றியும் அறிந்துகொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.

போகி பண்டிகையினை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் நாம் கொண்டாடினாலே போதும் நமது மண்ணுக்கும் நம் முன்னோர்களுக்கும் செய்யும் மகத்தான தொண்டு ஆகும் .

vijay Sat, 01/12/2019 - 13:31
Bogi Festival Indran Festival Bhogi History of  Bogi spiritual bhogi festival ஆன்மிகம்

English Title

Significance of the Bhogi festival

News Order

0

pariur amman temple

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் தீ மிதித்தல் விழா

கோபி அருகே உள்ள பிரசித்திபெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து வழிபட்டனர்.

2018 TopTamilNews. All rights reserved.