kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

gowtham's blog

நவராத்திரி நாத வைபவம்

கர்நாடக இசை ரசிகர்களின் செவிக்கு விருந்து படைக்க காத்திருக்கும்  “நவராத்திரி நாத வைபவம்”! 

நவராத்திரி வெறும் பொம்மைகளால் மட்டும் அலங்கரிக்கப்படுவது இல்லை.... அதனுடன் பாட்டும் இசையும் இணைந்து செவிகளுக்கு விருந்து படைக்கும். அதனால்தான் கோவில்களிலும் சபாக்களிலும் பல தொலைக்க...


அமலாபால்

மீண்டும் காதலில் சிக்கிய அமலாபால்... கல்யாணத்திற்கு ரெடியாகுகிறார்! அமலா பால் வெளியிட்ட வீடியோ!

‘ஆடை’ படத்தில் தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருந்தார் நடிகை அமலாபால். ஆடையின்றி நடித்த காட்சிகள் என்று படத்திற்கு விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தாலும், படம் நன்றாகவே இருந்தது. ஆனாலும்...

தம்பியைக் கொன்றவனை அடுத்த அரைமணி நேரத்தில் குத்திக் கொன்ற அண்ணன்! டாஸ்மாக்கில் அடுத்தடுத்த நடந்த இரட்டைக் கொலை!

தமிழகத்தில் தெருவிற்கு தெரு திறந்து வைக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடைகளினால் தினம் தினம் ஏதாவதொரு பகுதியில் கொலை, கொள்ளை, மானபங்கப்படுத்துதல், போலீசாரிடம் வாக்குவாதம் என்று குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. தமிழகத்தில் நிறைய இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணித்து வந்தாலும், சிசிடிவி கேமிராக்கள், குற்றங்கள் நடைப்பெற்ற பின்னர் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு தான் உதவியாய் இருக்கிறதே தவிர, குற்றச்செயல்கள் நடைப்பெறாமல் இருக்கச் செய்வதற்கான முயற்சிகளை அரசு எடுப்பதேயில்லை என்கிற கருத்து மக்களிடையே பரவலாக இருக்கிறது.

tasmac

இந்நிலையில், டாஸ்மாக் கடையில் நடைப்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் இலுப்பையூர் கிராமத்தைச் சேர்ந்த எழிலரசன் என்பவருடைய  மகன் ஆனந்த் (37). டூ வீலர் மென்கானிக்கான இவர் திருமணத்திற்கு பின் பெரம்பலூர், நல்லறிக்கை கிராமத்தில் தனது மாமனார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சண்முகம் (34). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இருவேறு சமூகத்தைச் சேர்ந்த ஆனந்த், சண்முகத்துக்கு இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது. நேற்றிரவு நல்லறிக்கை டாஸ்மாக் கடையில் சண்முகம், ஆனந்த் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய ஆனந்த், சண்முகத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த ஆனந்த்,  தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சண்முகத்தை குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த சண்முகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சண்முகம் உயிரிழந்தார்.

murder

இதனிடையே, இத்தகவலை அறிந்த சண்முகத்தின் மூத்த சகோதரர் முருகானந்தம் ஆத்திரமடைந்து ஆனந்தைத் தேடி டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு மது அருந்திக் கொண்டிருந்த ஆனந்தை பீர் பாட்டிலால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து சம்பவ இடத்திலேயே ஆனந்த் உயிரிழந்தார். டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறில் அடுத்தடுத்து இருவருமே பலியானார்கள். தற்போது கொலை செய்த முருகானந்தம் உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

gowtham Mon, 09/16/2019 - 17:53
Murder tasmac இரட்டைக் கொலை தமிழகம் க்ரைம்

English Title

Brother who stabbed his brother in the next half an hour! Subsequent double murder in Tasmaq!

News Order

0

Ticker

0 சூர்யாவின் ‘காப்பான்’ கேரளாவில் மட்டும் இத்தனை கோடிக்கு வியாபாரமா? வாய்பிளக்கும் கோடம்பாக்கம்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால் நடிப்பில் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது ‘காப்பான்’ படம். கே.வி.ஆனந்த், சூர்யா கூட்டணியிலும், பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிப்பிலும் இப்படம் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

kaappaan

இதுவரையில் ரிலீஸான சூர்யா படங்களிலேயே ‘காப்பான்’ படத்திற்கு தான் வசூல் ஆல் டைம் நம்பர் 1 ஓப்பனிங் வசூலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘காப்பான்’ படம் கேரளாவில் ரூ 3.7 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் திரைப்பயணத்தில் இதுவரை எந்தவொரு படமும் கேரளாவில் இத்தனை கோடிகளுக்கு வியாபாரமானது கிடையாது என்று ஆச்சர்யமாக கோடம்பாக்கத்தில் பார்க்கிறார்கள்.

gowtham Mon, 09/16/2019 - 17:34
Kaappaan Kerala காப்பான் சினிமா Kaappan update

English Title

Surya's kaappaan in Kerala alone, how many crores of business? Gaping Gobble!

News Order

0

Ticker

0 
கார்த்தி சிதம்பரம்

திகார் ஜெயிலில் இருந்து வந்ததும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடலாம்! - ப.சிதம்பரத்திற்கு மகன் உருக்கமான கடிதம்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம். இன்று அவருடைய 74வது பிறந்த நாளையொட்டி, அவரது மக...


தமன்னா

நீச்சல் உடையில் தமன்னா...! அதிர வைத்த ரசிகர்கள்!

அறிமுகமான காலங்களில் பாந்தமான பெண் என்கிற அறிமுகம் தமன்னாவுக்கு இருந்தது. அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், ‘கல்லூரி’ படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் தொடர் வாய்ப...


இயக்குனர் பாக்யராஜ்

இந்த நடிகையைப் பார்த்தா சைட் அடிக்க தோணுது.. இயக்குனர் பாக்யராஜ் கேவலமான பேச்சு!

அங்காடி தெரு படத்தில் அறிமுகமாகி, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர் மகேஷ்  தற்போது நடித்து வரும் ‘வீராபுரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இசை...

கோட்சே வெறும் துப்பாக்கி தான்..‘காப்பான்’ மேடையில் சூர்யா அதிரடி!

கேவி ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, 'கோட்சே காந்தியை சுட்ட பின்னர் பெரும் வன்முறை வெடித்தது. அப்போது எல்லோரும் வன்முறையை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது, ‘கேட்சேவின் அந்த துப்பாக்கியை எடுத்து சுக்குநூறாக உடைத்து விடுங்கள்’ என பெரியார் சொன்னார். 

kaappaan

அப்போது அய்யா நாங்கள் கோட்சேவை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அவருடைய துப்பாக்கியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என அருகில் உள்ளவர்கள் அவரிடம் கேட்டுள்ளார்கள். அதற்கு கோட்சே வெறும் துப்பாக்கி தான் என சாதாரணமாக சொன்னார் பெரியார்" என்று விழாவில் பேசினார் சூர்யா. 
மேலும் ஒவ்வொரு நிகழ்வின் போது ஒரு சித்தாந்தம் இருப்பதாக காந்தி கொலை மூலம் பெரியார் சுட்டிக்காட்டிருப்பதாக சூர்யா தெரிவித்தார். காப்பான் படத்தில் பல விஷயங்கள் ரசிக்கும்படி இருக்கும் என்றார். அண்மையில் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராகவும் பேசியிருந்தார். இதேபோல் முன்பு நடிகர் கமல் காந்தியை கொன்ற கோட்சே குறித்து பேசிய கருத்து சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி இருந்தது.

kaappaan

கோட்சே பற்றிய சூர்யாவின் பேச்சு, ‘காப்பான்’ படத்தின் கதையை ஓரளவுக்கு வெளிப்படுத்துவதாகவும், படத்தின் பிரதமராக நடிக்கும் மோகன்லாலைக் கொல்ல வருபவர்களை சூர்யா தடுத்து நிறுத்தி அவரைக் காப்பாற்றுகிறாரா, அல்லது மோகன்லாலைக் கொல்வதற்கான நியாயம் கற்பிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரா என்று ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.

gowtham Mon, 09/16/2019 - 15:15
Kaappaan press meet சூர்யா சினிமா Kaappan update

English Title

Gotze is just a gun .. Surya Action

News Order

0

Ticker

0 
 ஸ்டாலின்

தலைவருக்கு வாழ்த்துக்கள்... ஸ்டாலின் பேனரால் ஏற்பட்ட பரபரப்பு!

சென்னை பள்ளிக்கரணயில் சாலையின் நடுவே வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் டூ விலரில் சென்றுக் கொண்டிருந்த சுபஸ்ரீ நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அத...

‘காப்பான்’ படத்தின் ரன்னிங் டைம் இது தான்! வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள ‘காப்பான்’ படம் இம்மாதம் 20ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், ‘காப்பான்’ படத்தைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘அயன், மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காப்பான். காப்பான் திரைப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

kaappaan stills

‘காப்பான்’ படத்தில் நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.   காப்பான் திரைப்படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில்,  தற்போது படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ‘காப்பான்’ திரைப்படம் 165 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 45 நிமிடங்களாக இருக்கும் என்று வெளியாகியுள்ளது. மேலும் படத்துக்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் அளித்துள்ளனர்.  இதுவரையில் சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணியில் வெளியான படங்கள் பரபரப்புக்கும், சமூக அக்கறைக் கொண்ட காட்சிகளுக்கும் பெயர் போனாதால், இம்முறையும் இந்தக் கூட்டணியில் வெளியாகும் ‘காப்பான்’ படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் கே.வி.ஆனந்தின் படங்களுக்கு வழக்கமாக கதை, வசனங்களை எழுதும் எழுத்தாளர்கள் சுபா பணியாற்றாமல், பட்டுக்கோட்டை பிரபாகர் முதல் முறையாக கே.வி.ஆனந்துடன் இணைந்திருக்கிறார்.

kaappaan

துப்பறியும் கதைகளில் காதலைச் சுவாரஸ்யமாக சேர்க்கும் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இணைந்திருப்பதால், காதல் காட்சிகளுக்கும் குறைவிருக்காது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். தவிர, ‘காப்பான்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் நடிகர் ஆர்யாவும், நடிகை சாயிஷாவும் தங்களது காதலை வளர்த்தார்கள். அதனால் சூர்யா, ஜோதிகா ஜோடிக்கு எப்படி காதலை வளர்க்க ஒரு படம் அமைந்ததோ, அதே போல் ஆர்யா, சாயிஷா ஜோடிக்கு இந்த படம் மறக்க முடியாத படமாக இருக்கும். லைகா புரொடக்‌ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

gowtham Mon, 09/16/2019 - 14:59
kaappaan kaappaan movie காப்பான் சினிமா Kaappan update

English Title

It's the Running Time of the movie Interesting information released!

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.