பாகிஸ்தானுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் கொடுத்தது போல சீனாவுக்கு டிஜிட்டல் ஸ்டிரைக்! – மத்திய அமைச்சர் பேச்சு

 

பாகிஸ்தானுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் கொடுத்தது போல சீனாவுக்கு டிஜிட்டல் ஸ்டிரைக்! – மத்திய அமைச்சர் பேச்சு

சீனா நடத்திய தாக்குதலில் நம் பக்கம் 20 வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால், சீன தரப்பில் இரண்டு மடங்கு அதிகமாக பலி எண்ணிக்கை இருக்கும், சர்ஜிக்கல் ஸ்டிரைக் போல சீனாவுக்கு இந்தியா டிஜிட்டல் ஸ்டிரைக் கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் கொடுத்தது போல சீனாவுக்கு டிஜிட்டல் ஸ்டிரைக்! – மத்திய அமைச்சர் பேச்சுமேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இப்போது இருந்த பிரசார பணிகளில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் நடந்த பா.ஜ.க கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பங்கேற்றுப் பேசினார்.

பாகிஸ்தானுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் கொடுத்தது போல சீனாவுக்கு டிஜிட்டல் ஸ்டிரைக்! – மத்திய அமைச்சர் பேச்சுஅப்போது அவர், “நாம் தற்போது இரண்டு சி பற்றி பேசி வருகிறோம். ஒன்று கொரோனா, மற்றொன்று சீனா. பேச்சு வார்த்தையில் தீர்வு அடையும் அமைதியையே நாம் விரும்புகிறோம். ஆனால் இந்தியா மீது யாராவது கெட்ட எண்ணத்தோடு வாலாட்டினால் அதற்கு தக்க பதிலடி அளிக்கப்படும். நம்முடைய 20 வீரர்கள் நாட்டுக்காக தங்கள் உயிரைக் கொடுத்தார்கள் என்றால், சீனா தரப்பில் அது இரு மடங்காக இருக்கும். அதனால்தான் அவர்கள் எவ்வளவு பேர் உயிரிழந்தார்கள் என்ற எண்ணிக்கையையே தெரிவிக்கவில்லை.

பாகிஸ்தானுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக் கொடுத்தது போல சீனாவுக்கு டிஜிட்டல் ஸ்டிரைக்! – மத்திய அமைச்சர் பேச்சுயுரியில் தாக்குதல் நடந்த போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. புல்வமாவில் 40 வீரர்கள் கொல்லப்பட்டபோது விமானப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. நம்முடைய வீரர்களின் தியாகம் வீணாகப் போக விடமாட்டோம் என்று நம்முடைய பிரதமர் கூறியுள்ளார். அதாவது பதிலடி கொடுக்கப்படும். சீன செயலிகள் மீது தடை விதிக்கப்பட்டது மூலம் சீனாவுக்கு டிஜிட்டல் ஸ்டிரைக் அடி கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.