புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதம்!

 

புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதம்!

எல்லா தமிழ் மாதங்களுக்கும் சிறப்பான மாதங்கள்தான் என்றாலும் புரட்டாசிக்கென்று தனி சிறப்புண்டு. புரட்டாசி மாதம் என்பது ஜோதிடத்தில் கன்னி ராசியை குறிக்கும். நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதமாகும். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார்.

சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற காரணமும் இதுவேயாகும். சந்திரன் முழு நிலவாகத்தெரியும் பவுர்ணமியில் வரும் நட்சத்திரமே இம்மாதத்தின் பெயராகவும், கோவில் திருவிழாவாகவும் வைத்தனர். மின் விளக்கில்லாத போது நிலவு ஒளியில் மக்கள் கோயிலில் கூடுவது சிறப்பு.

புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதம்!

‘மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
என்றாள் ஆண்டாள் நாச்சியார்.
முழுநிலவை ஒட்டியே திருவிழாக்கள் நடை பெறுகிறது.
புரட்டாசி கன்னிமாதம், சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் கன்னிமாதம்.
இந்த மாதத்தில் ‘பெய் தால் மண் உருகப்பெய்யும், காய்ந்தால் பொன் உருகக் காயும்’ என்பார்கள் அதாவது பகலில் பொன் உருகும் அளவு வெப்பம், சூடு இருக்கும். இரவு மண் கரைந்தோடும் அளவு மழை பெய்யும் என்று அர்த்தம்.

புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதம்!

‘குறையன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!’ நீ கலிநாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோயிலில் திருமலையில் நிற்கின்றாய் என்று உணர்ந்து ‘மலையப்பா, மணிவண்ணா, கோவிந்தா, கோவிந்தா, கோபாலா’ என நெற்றியில் நாமாம் தரித்து பஜனை செய்து, வீடுகளில் பாத்திரத்தில், செம்பில், பிச்சை ஏற்று அதைச் சமைத்து விரதம் முடிப்பார்கள் பெருமாள் பக்தர்கள் சிலர். புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதம் முழுவதும் பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் பெருமாள் துதியை சொல்லி வந்தால், சனிபகவானின் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம். பெருமாள் துதி
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்

ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ