டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

 

டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தமிழகத்தில் புரெவி புயல் வலுவிழந்த நிலையிலும் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேசமயம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருவாரூர், மன்னார்குடி, நாகை, புதுக்கோட்டை ,மயிலாடுதுறை ,விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளனர். அதேபோல் மன்னார்குடி, வீரன்வயல் உள்ளிட்ட கிராமங்களில் மழைநீரால் கால்நடைகளும் வீடுகளும் பாதிப்படைந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பூம்புகாரை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

இந்நிலையில் திருவாரூர், குடவாசல், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகை வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, ஆயக்காரன்புலம், மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், மணல்மேடு, செம்பனார்கோவில், சீர்காழி பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது.