“அரசு கூச்சமின்றி வேலை செய்ததன் சிறந்த உதாரணமாக இந்த ஏழு ஆண்டுகள் “

 

“அரசு கூச்சமின்றி வேலை செய்ததன் சிறந்த உதாரணமாக இந்த ஏழு ஆண்டுகள் “

விவசாயிகள் 6 மாதம் போராடியும் அவர்களது பிரச்சனைகளை தீர்க்க தவறிய மோடி அரசை கண்டித்தும், மோடி பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு பெறும் தினமான மே 26 இன்று “கருப்பு தினம்” கடைப்பிடிக்கப்படுகிறது.இதற்கான எதிர்ப்பு போராட்டம் #CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“அரசு கூச்சமின்றி வேலை செய்ததன் சிறந்த உதாரணமாக இந்த ஏழு ஆண்டுகள் “

அத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடி தனது பதவியின் 7வது ஆண்டை நிறைவு செய்கிறார்.இந்த ஏழு ஆண்டுகளில் பொது மக்களின் நலன்களுக்கெதிராக மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளி விரோதக் கொள்கைகளை #BJP கார்ப்பரேட் நண்பர்களுக்கு லாபமளிப்பதற்காக அலட்சியமாக முன்னெடுத்துச் சென்றதை கண்டோம். கார்ப்பரேட் கொள்ளையை அதிகரிக்கவும், பொதுமக்கள் பட்டினி கிடந்தும், பெருந்தொற்றாலும், வேலையின்றியும் சாக விடவும் ஆட்சியிலிருக்கும் அரசு கூச்சமின்றி வேலை செய்ததன் சிறந்த உதாரணமாக இந்த ஏழு ஆண்டுகள் உள்ளன.

“அரசு கூச்சமின்றி வேலை செய்ததன் சிறந்த உதாரணமாக இந்த ஏழு ஆண்டுகள் “

அத்தியாவசியப் பண்டங்கள் (திருத்தம்) மசோதா – 2020; விவசாயிகள் உற்பத்தி, வியாபாரம் மற்றும் வர்த்தக மசோதா, 2020; விலை உறுதி மற்றும் விவசாய சேவைகள் குறித்து விவசாயிகளின் ஒப்புதல் மசோதா 2020 ஆகியவை இந்திய விவசாயத்தையும், நமது விவசாயிகளையும் அழித்து விடும். விவசாயப் பொருட்களின் உற்பத்தி, வழங்கல் விநியோகம், ஆகியவற்றின் கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் உற்பத்தியை பெரிய வர்த்தகர்களும், நிறுவனங்களும் வாங்குவதையும், கிட்டங்கிகளில் தேக்கி விலை அவர்களுக்குப் போதுமானதாகத் தோன்றுகிறதோ அப்போது விற்கவும் அனுமதிக்கின்றன.ஒட்டுமொத்தத் துறையை கார்ப்பரேட்டுகளிடம் கையில் அளிப்பது என்பது, குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒழிப்பதற்கும், பொது விநியோக முறையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதற்கும், நேர்மையற்ற வியாபாரிகளும், கார்ப்பரேட்டுகளும் உணவு தானியத்தைப் பதுக்கவும் இட்டுச் செல்லும் ” என்று பதிவிடப்பட்டுள்ளது.