’கறுப்பு பண புகார்’ சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

 

’கறுப்பு பண புகார்’ சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

இந்திய அரசின் வருமான வரி அதிகாரிகள் நிறுவனங்கள் மற்றும் தனிமனிதர்களிடம் பண பரிமாற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வில் ஈடுபடுவது எல்லோருக்கும் தெரிந்ததே. அப்படி ஏதேனும் ஒரு நிறுவனத்தைப் பற்றிய பண மோசடி குறித்து தெரியும் பட்சத்தில் திடீரென்று சோதனை செய்வார்கள்.

அப்படித்தான் ’சீனா நாட்டைச் சேர்ந்த சிலர் மீது கறுப்புப் பணம் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பதாக வந்த புகார் வந்திருக்கிறது. இதையெடுத்து புகாரில் குறிப்பிட்டப்படிருந்த சீனர்கள் மற்றும் அவர்களின் இந்திய நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனைகளை மேற்கொண்டது வருமான வரித் துறை.

’கறுப்பு பண புகார்’ சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

அந்தச் சோதனையில் பல்வேறு போலி நிறுவனங்களின் பெயர்களில் நாற்பதுக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள், சீனர்களின் சார்பாகத் துவக்கப்பட்டிருப்பதும், ரூ.1000 கோடிக்கும் அதிகமான கடன் பெற முயற்சி செய்தததும் தெரியவந்துள்ளது.   போலி நிறுவனங்களின் பெயரில், சீன நிறுவனம் ஒன்றின் துணை நிறுவனமும், அதன் தொடர்புடைய அமைப்புகளும் ரூ. 100 கோடிக்கு போலி முன் பணம்  பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது’ என்று நிதியமைச்சக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

’கறுப்பு பண புகார்’ சீன நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த விவகாரம் இன்னும் பெரிய விவாதப் பொருளாக மாறும் எனத் தெரிகிறது.