ஒன்றரை வயது குழந்தைக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு… மருத்துவர்கள் அதிர்ச்சி!

 

ஒன்றரை வயது குழந்தைக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு… மருத்துவர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் கொரோனா வைரஸை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையே கருப்பு பூஞ்சை நோய் அதிகமாக தாக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அதன் படி, கொரோனாவில் இருந்து மீண்ட பல நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டதால் இந்த நோயை தொற்றுநோயாக அறிவிக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.

ஒன்றரை வயது குழந்தைக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு… மருத்துவர்கள் அதிர்ச்சி!

அதன் படி, பல மாநிலங்கள் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்துள்ளன. மேலும், அதற்கான மருந்துகளையும் இறக்குமதி செய்யத் தொடங்கிவிட்டன. குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலேயே பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பிகார்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒன்றரை வயது குழந்தைக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றரை வயது குழந்தைக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு… மருத்துவர்கள் அதிர்ச்சி!

அந்தக் குழந்தைக்கு இணை நோய்கள் ஏதும் இல்லாத நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பாதித்து இருப்பது மருத்துவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே இந்த நோய் அதிகமாக தாக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது குழந்தைக்கு பாதிப்பு உறுதியாகி இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.