பாஜகவின் வேல் யாத்திரை ரத்து : கூட்டணி குறித்து சூசகம் தெரிவித்த எல். முருகன்

பாஜகவின் வேல் யாத்திரை ரத்து : கூட்டணி குறித்து சூசகம் தெரிவித்த எல். முருகன்

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை தடையை மீறி நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடைவிதித்த நிலையில் பாஜக வினர் வேல் யாத்திரை செய்ததின் எதிரொலியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாஜகவின் வேல் யாத்திரை ரத்து : கூட்டணி குறித்து சூசகம் தெரிவித்த எல். முருகன்

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக பாஜக சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். டிச. 4 ஆம் தேதி அறுபடை வீடுகளில் வழிபாடு செய்தபின் டிச. 5 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு நிகழ்ச்சி நிறைவுபெறும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் , அதிமுக பாஜக கூட்டணி குறித்து பாஜக தேசியத் தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.

பாஜகவின் வேல் யாத்திரை ரத்து : கூட்டணி குறித்து சூசகம் தெரிவித்த எல். முருகன்

நிவர் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.