எங்க கட்சியில் சேர விரும்பினால் விரிந்த கைகளுடன் வரவேற்போம்.. சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.

எங்க கட்சியில் சேர விரும்பினால் விரிந்த கைகளுடன் வரவேற்போம்.. சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.

[21:55, 7/14/2020] Gps: ராஜஸ்தானில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் அந்த கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல்வர் பதவியை மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கட்சி தலைமை கொடுத்தது. சச்சின் பைலட்டை சமாதானம் செய்ய அவருக்கு துணை முதல்வர் பதவியை காங்கிரஸ் தலைமை வழங்கியது.

எங்க கட்சியில் சேர விரும்பினால் விரிந்த கைகளுடன் வரவேற்போம்.. சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.

முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே பல மாதங்களாக புகைச்சல் நிலவியது. இந்நிலையில் மாநிலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கை விசாரித்த ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழு, இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சச்சின் பைலட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து சச்சின் பைலட், கெலாட்டுக்கு எதிராக வெளிப்படையாக கலகத்தை தொடங்கினார்.

எங்க கட்சியில் சேர விரும்பினால் விரிந்த கைகளுடன் வரவேற்போம்.. சச்சின் பைலட்டுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.

இந்நிலையில் 2வது முறையாக நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து நேற்று காலை வரை அம்மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டை அந்த பொறுப்பில் இருந்து காங்கிரஸ் அதிரடியாக நீக்கியது. இதனையடுத்து தங்களது கட்சியில் சேர சச்சின் பைலட்டுக்கு பா.ஜ.க. வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது. பா.ஜ.க. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், கட்சியை தொடங்கிய பிறகு பல மக்கள் பா.ஜ.க.வில் இணைந்ததால் உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. எங்களது சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், எங்களது கட்சியில் சேர விரும்பவர்களை நாங்கள் நிச்சயமாக விரிந்த கைகளுடன் வரவேற்போம் என தெரிவித்தார்.