தொற்று நோயை தடுக்காமல், மக்களை பாதுகாக்காமல் அரசு பார்வையாளராக நிற்கிறது.. கேரள அரசை சாடிய பா.ஜ.க.

 

தொற்று நோயை தடுக்காமல், மக்களை பாதுகாக்காமல் அரசு பார்வையாளராக நிற்கிறது.. கேரள அரசை சாடிய பா.ஜ.க.

கேரளாவில் தொற்று நோயை தடுக்காமல், மக்களை பாதுகாக்காமல் அரசு பார்வையாளராக நிற்கிறது என்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசாங்கத்தை பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தாலும், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த சில தினங்களாக நம் நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பில் 50 சதவீதத்துக்கும் மேல் கேரளாவில் தொடர்ந்து பதிவாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், தொற்று நோயை தடுக்காமல், மக்களை பாதுகாக்காமல் கேரள அரசு பார்வையாளராக நிற்கிறது என்று பினராயி விஜயன் தலைமையிலான அரசை பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

தொற்று நோயை தடுக்காமல், மக்களை பாதுகாக்காமல் அரசு பார்வையாளராக நிற்கிறது.. கேரள அரசை சாடிய பா.ஜ.க.
கொரோனா வைரஸ்

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கும்மனம் ராஜசேகரன் கூறியதாவது: அவர்கள் (பினராயி விஜயன் அரசாங்கம்) கோவிட் தொற்றுநோயை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கால கட்டத்தில் அரசாங்கம் பார்வையாளராக நிற்கிறது. இது மிகவும் பரிதாபமான நிலை. அதேநேரத்தில் மத்திய அரசு மாநிலத்துக்கு நிதியுதவியையும், உதவியையும் வழங்கியுள்ளது. ஆனால் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் அல்லது உயிர்களை பாதுகாப்பதில் மாநில அரசு அக்கறை காட்டவில்லை. அதுதான் இங்கே பிரச்சினை.

தொற்று நோயை தடுக்காமல், மக்களை பாதுகாக்காமல் அரசு பார்வையாளராக நிற்கிறது.. கேரள அரசை சாடிய பா.ஜ.க.
பினராயி விஜயன்

அதேநேரத்தில் மற்ற மாநிலங்கள் மிகவும் கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் அவை தொற்றுநோயை வெற்றிகரமாக தடுத்துள்ளன. ஆனால் கேரளாவில் தினசரி ஒரு சதவீதம் அல்லது இரண்டு சதவீதம் கோவிட் பாதிப்புகள் அதிகரிக்கிறது. எனவே இது மாநில அரசின் தோல்வி. அது (பினராயி விஜயன் அரசாங்கம்) பொதுமக்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இந்த தொற்றுநோயை தடுக்க அரசாங்கத்தால் செயல்பட முடியவில்லை என்பதை அவர்கள் மக்களிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.