அசாம், உ.பி.யில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம்.. ஆனால் பினராயி விஜயன் மோடி கடிதம் எழுதுவதில் பிசி

அசாம், உ.பி.யில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம்.. ஆனால் பினராயி விஜயன் மோடி கடிதம் எழுதுவதில் பிசி

அசாம் மற்றும் உத்தர பிரதேச அரசுகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசமாக செலுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் கேரள முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதில் பிசியாக உள்ளார் என பா.ஜ.க. கிண்டல் அடித்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வேளையில் கடந்த திங்கட்கிழமையன்று, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

அசாம், உ.பி.யில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம்.. ஆனால் பினராயி விஜயன் மோடி கடிதம் எழுதுவதில் பிசி
பினராயி விஜயன்

இந்நிலையில் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், தடுப்பூசி விநியோகம் தொடர்பான புதிய கொள்கையை மறுபரிசீலனை செய்யுங்க மற்றும் மாநில அரசுகளுக்கு தேவையான அளவு தடுப்பூசிகளை மாநில அரசாங்கங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். இதனை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது.

அசாம், உ.பி.யில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி இலவசம்.. ஆனால் பினராயி விஜயன் மோடி கடிதம் எழுதுவதில் பிசி
பி.எல்.சந்தோஷ்

இது தொடர்பாக பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் எல்.சந்தோஷ் கூறுகையில், அசாம், உத்தர பிரதேச அரசுகள் தங்களது மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ளன. அசாம் அரசு ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு 1 கோடி டோஸ் தடுப்பூசிக்கு ஆர்டர் வழங்கியுள்ளது. ஆனால் கேரள முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதில் மும்முரமாக உள்ளர் என கிண்டல் அடித்துள்ளார்.