சட்ட நகலை கிழித்த கெஜ்ரிவால்…காங்கிரஸ் நிலைமைதான் ஆம் ஆத்மிக்கும் ஏற்படும்.. பா.ஜ.க. சாபம்

சட்ட நகலை கிழித்த கெஜ்ரிவால்…காங்கிரஸ் நிலைமைதான் ஆம் ஆத்மிக்கும் ஏற்படும்.. பா.ஜ.க. சாபம்

டெல்லி சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நகலை கிழித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரசின் நிலைமைதான் ஆம் ஆத்மிக்கும் ஏற்படும் என்று பா.ஜ.க.வின் அமித் மால்வியா எச்சரிக்கை செய்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதிக்க டெல்லி சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அந்த அமர்வில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த சட்டங்களின் நகலை கிழித்தார். இதற்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சட்ட நகலை கிழித்த கெஜ்ரிவால்…காங்கிரஸ் நிலைமைதான் ஆம் ஆத்மிக்கும் ஏற்படும்.. பா.ஜ.க. சாபம்
அஜித் மால்வியா

இது தொடர்பாக பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவரான அமித் மால்வியா டிவிட்டரில், கடந்த முறை ராகுல் காந்தி ஒரு சட்டத்தின் நகலை கிழித்து விட்டார். இன்று வரை இந்த நாட்டு மக்கள் காங்கிரசின் தேர்தல் வீழ்ச்சிகளை (தோல்வி) மாற்றவில்லை. இப்போது அதே லீக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலும் சேர்ந்துள்ளார். இந்த ஆணவமும் அதன் தலைவிதியை சந்திக்கும். மக்கள் நாடகங்களை விரும்புவதில்லை என்று பதிவு செய்து இருந்தார்.

சட்ட நகலை கிழித்த கெஜ்ரிவால்…காங்கிரஸ் நிலைமைதான் ஆம் ஆத்மிக்கும் ஏற்படும்.. பா.ஜ.க. சாபம்
காங்கிரஸ்

டெல்லி சட்டப்பேரவையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், கடந்த 6-7 ஆண்டுகளில் பா.ஜ.க. தேர்தல்களை மிகவும் விலை உயர்ந்ததாக ஆக்கியுள்ளது. எனவே அதிக பணம் தேர்தல்களில் (அரசியல் கட்சிகளால்) செலவிடப்படுகிறது. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்காக நிறைவேற்றப்படவில்லை. பா.ஜ.க.வுக்கான தேர்தல் நிதியை உறுதி செய்வதற்காக இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.