“எல். முருகனின் ஒப்புதலுடன் ” பாலியல் புகாரளித்த பாஜக பெண் நிர்வாகியின் பதவி பறிப்பு!

“எல். முருகனின் ஒப்புதலுடன் ” பாலியல் புகாரளித்த பாஜக பெண் நிர்வாகியின் பதவி பறிப்பு!

விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் மீது பாலியல் புகார் தெரிவித்த பாஜக பெண் நிர்வாகியின் பதவி பறிக்கப்பட்டது.

“எல். முருகனின் ஒப்புதலுடன் ” பாலியல் புகாரளித்த பாஜக பெண் நிர்வாகியின் பதவி பறிப்பு!

விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிர் அணி பொதுச்செயலாளராக பதவி வகித்தவர் காயத்ரி. இவர் அண்மையில் விழுப்புரம் மாவட்ட தலைவர் கலியவரதன் மீது பாலியல் புகார் அளித்தார்.

“எல். முருகனின் ஒப்புதலுடன் ” பாலியல் புகாரளித்த பாஜக பெண் நிர்வாகியின் பதவி பறிப்பு!

அதில் கட்சியில் தன்னை பெரிய ஆளாக ஆக்குவேன் என்று நயவஞ்சகமாக பேசி ரூ. 5 லட்சம் பணம் பறித்ததாகவும், பலமுறை மிரட்டி பாலியல் வன்முறை செய்துள்ளார் என்றும் தமிழக பாஜக தலைவர் எல். முருகனிடம் புகார் அளித்தார். அத்துடன் பாலியல் புகார் குறித்து குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இந்த சம்பவம் அக்கட்சி மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தன் மீது பாலியல் புகார் அளித்த பெண் நிர்வாகியின் கட்சிப் பதவியைப் பறித்தார் விழுப்புரம் பாஜக தலைவர் கலிவரதன். தமிழக பாஜக தலைவர் எல். முருகன் ஒப்புதலுடன் விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிரணி செயலாளர் காயத்ரியின் பதவி பறிக்கப்பட்டது என கலிவரதன் அறிவித்துள்ளார்.

“எல். முருகனின் ஒப்புதலுடன் ” பாலியல் புகாரளித்த பாஜக பெண் நிர்வாகியின் பதவி பறிப்பு!

பாலியல் புகார் அளித்த பாஜக பெண் நிர்வாகியின் புகாரை உரிய முறையில் விசாரிக்காமல், அவரை மிரட்டும் தொனியில் பதவி பறிக்கப்பட்டது ஏற்புடையதல்ல என்று காயத்ரியின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.