மணிப்பூரில் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க! – முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

 

மணிப்பூரில் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க! – முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

மணிப்பூரில் பா.ஜ.க-வுக்கு சுயேட்சை உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்ற நிலையில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க! – முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டுமணிப்பூரில் 2017ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் உதிரி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கும் வாங்கியது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அதில் அணி மாறிய எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் அணி மாறிய எம்எ.ல்.ஏ-க்கள் சட்டப்பேரவைக்குள் நுழைய அம்மாநில நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்தது. திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றனர். இதனால் பா.ஜ.க பெரும்பான்மையை இழந்தது.
தற்போதைய நிலையில் சட்டப்பேரவையின் பலம் 49 ஆக குறைந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 25 எம்.எல்.ஏ-க்கள் இருந்தால் போதும். காங்கிரஸ் கட்சிக்கு 26 பேரின் ஆதரவும் பா.ஜ.க-வுக்கு 23 பேரின் ஆதரவும் உள்ளது. இதனால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மணிப்பூரில் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க! – முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

இந்த நிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க-வும் மோதின. தேர்தல் நடைபெற்ற நேற்றைய தினம் சட்டப்பேரவைக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்ட 13 எம்.எல்.ஏ-க்களில் பா.ஜ.க ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் நான்கு எம்.எல்.ஏ-க்கள் வாக்களிக்க சபாநாயகர் அனுமதி அளித்தார். கட்சி மாறிய பா.ஜ.க எம்.எல்.ஏ மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் பதவியை பறித்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால் பா.ஜ.க-வின் பலம் அதிகரித்தது. மாநிலங்களவைத் தேர்தலில் 28 வாக்குகள் பெற்று பா.ஜ.க வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளருக்கு 24 வாக்குகளே கிடைத்தது. இந்த தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று கூறி இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடப் போவதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கூறியுள்ளார்.
இது குறித்து அம்மாநில முதல்வர் பைரன் சிங் கருத்து கூறுகையில், “அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரும்பும் எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் பயணிக்க விரும்புகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலரின் ஆதரவு எங்களுக்கு உள்ளது” என்றார்.
மணிப்பூரில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள் கட்சிகள், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாற்றம் நிகழுமா அல்லது பா.ஜ.க அனைத்தையும் முறியடித்து தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.