“கடவுளான மோடி; மம்தா மண்ணை கவ்வுவார்” – பிரசாந்த் கிஷோரின் ஆடியோவை லீக் செய்த பாஜக!

 

“கடவுளான மோடி; மம்தா மண்ணை கவ்வுவார்” – பிரசாந்த் கிஷோரின் ஆடியோவை லீக் செய்த பாஜக!

தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. அங்கு ஆளும் திருணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இடதுசாரிகள் தலைமையில் மூன்றாம் அணி உருவாகிவந்தாலும் ரியல் போட்டி இவர்கள் இருவருக்கும் தான். ஜென்ம பகையாளிகளாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்கின்றனர். மற்ற மாநிலங்களில் செய்ததைப் போலவே மேற்கு வங்கத்திலும் தனது சித்து விளையாட்டுகளைத் தொடங்கியது.

“கடவுளான மோடி; மம்தா மண்ணை கவ்வுவார்” – பிரசாந்த் கிஷோரின் ஆடியோவை லீக் செய்த பாஜக!

திருணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து, பாஜகவில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கின்றனர். இதற்குப் பாஜகவின் திருவிளையாடல் என்று கூறப்பட்டது. இன்னொரு புறம் மம்தாவின் தேர்தல் உத்தி ஆலோசகரான பிரசாந்த் கிஷோருக்கும் பாஜகவுக்கும் நடைபெறும் விவாதம் காரசாராமாக உள்ளது. தனிமனித தாக்குதல்களின் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பது தான் வியூகம் போல. தற்போது பிரசாந்த் கிஷோர் பேசிய சில ஆடியோ கிளிப்கள் வெளியாகி மேற்கு வங்க அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

“கடவுளான மோடி; மம்தா மண்ணை கவ்வுவார்” – பிரசாந்த் கிஷோரின் ஆடியோவை லீக் செய்த பாஜக!

சமீபத்தில் இணைய வாயிலாக சாட் ரூமில் பத்திரிகையாளர்களுடன் உரையாடல் நிகழ்த்தியிருக்கிறார். அப்போது அவர் பேசிய சில ஆடியோ கிளிப்களை மேற்கு வங்க பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா ட்விட்டரில் வெளியிட்டு பகீர் கிளப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், “திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் கூட பாஜக வெற்றிபெறும் என்று மம்தா பானர்ஜியின் தேர்தல் ஆலோசகர் ஒப்புக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் 27 சதவீதம் உள்ள எஸ்சி பிரிவினர் உள்ளிட்டவர்கள் பாஜகவுக்கு தான் வாக்களிக்க போகிறார்கள்.

கடந்த 20 வருடங்களாக திருணாமுல் காங்கிரஸினரும் இடதுசாரிகளும் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தவே இயங்கியிருக்கிறார்கள் என்பதையும் ஆமோதித்திருக்கிறார். பாவம் இந்தக் கலந்துரையாடல் பொதுவான தளத்தில் நிகழ்கிறது; அனைவருக்கும் இந்த ஆடியோக்கள் செல்லலாம் என்று அவர் நினைக்கவில்லை போல. “மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி மம்தாவை விட பிரபலமானவர். நாடு முழுவதும் பல இடங்களில் அவரைக் கடவுளாகப் பாவிக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பலை மிகக்கடுமையாக உள்ளது” என்று பிரசாந்த் கிஷோர் ஓபனாகவே சொல்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரசாந்த் கிஷோரின் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன. பெரும் சர்ச்சையான இந்த ஆடியோக்கள் குறித்து மௌனம் கலைத்த பிரசாந்த் கிஷோர், “தங்களது கட்சித் தலைவர்கள் பேசியதைக் காட்டிலும் என்னுடைய பேச்சை முக்கியவத்துவம் வாய்ந்ததாக பாஜகவினர் கருதுகிறார்கள்.

அது எனக்கு மகிழ்ச்சி தான். எனது உரையாடலின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு குதூகலிப்பவர்கள், முழுமையான பகுதியையும் சேர்த்து பதிவிடுங்கள். பாஜக 100 இடங்களுக்கு மேல் வெற்றிபெறாது என்பதை மீண்டும் ஒருமுறை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.