முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக தலையிடாது – ஹெச்.ராஜா

 

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக தலையிடாது – ஹெச்.ராஜா

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்பது அக்கட்சியின் உள்விவகாரம் என்பதால் பாஜக அதில் தலையிடாது என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் அதே வேளையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பூகம்பம் கிளம்பியிருக்கிறது. நான் தான் போட்டியிடுவேன் என ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் மல்லுக்கட்டி வருகின்றனர். இந்த விவாகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்து நாளை முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்க உள்ளனர். பெரும்பாலும் ஈபிஎஸ் தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக தலையிடாது – ஹெச்.ராஜா

இதனிடையே முதல்வர் வேட்பாளர் பற்றிய பிரச்னையில் அதிமுகவுடன் பலமான கூட்டணி அமைத்திருக்கும் பாஜக தலையீடு இருக்குமோ? அதனால் தான் முதல்வர் வேட்பாளர் பற்றி அறிவிக்க இந்த கால அவகாசமோ? என்றும் அரசியல் விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முதல்வர் வேட்பாளர் விவகாரம் அதிமுகவின் உள்விவகாரம், அதில் பாஜக தலையிடாது என தெரிவித்தார்.

தேசிய நிர்வாகிகள் பட்டியலில் இருந்து தான் நீக்கப்பட்டது குறித்து பேசிய அவர், தனக்கு புதிய பதவி கிடைக்கும் என்றும் அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என தெரிவித்தார். மேலும், ஹத்ராஸில் இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.